என்று கூறி, பின்னை - பிறகு, போய் - வெளியிற்
சென்று (மீண்டும்),
என்னை - என்னை, கள்வனென்று - திருடனென்றும், பெரியபூசல் -
பெரிய இரைச்சலை, இட்டான் - செய்தான், எ-று. (42)
266. கருமமே யிறைவ கேளாய் களவின்றன் விளைவை யோதுந்
தருமநூ லுரைக்கு நானே தக்கில்லாக் களவு செய்யின்
ஒருவரு முலகிற் கள்ள ரல்லவ ரில்லை யென்னாப்
பெரியதோர் சபதஞ் செய்தா னரசனும் பிறருந் தேற.
(இ-ள்.) இறைவ
- அரசனே!, கருமம் - எனது காரியத்தை,
கேளாய் - கேட்பாயாக, களவின் தன் - களவினாலாகும், விளைவை -
இம்மைமறுமைப் பயன்களை, ஓதும் - சொல்லுகின்ற, தருமநூல்
-
தருமசாஸ்திரத்தை, உரைக்கும் -
(தெரிந்து) யாவர்களுக்கும்
சொல்லுகின்ற, நானே - யானே, தக்கிலா - தகுதியில்லாத, களவு
-
களவை, செய்யின் - செய்தால்,
உலகில் - இவ்வுலகத்தில்,
கள்ளரல்லவர் - திருடரல்லாத யோக்கியர்கள்,
ஒருவரும் -
யாவரொருவரும், இல்லை - இலராவர், என்னா - என்று, அரசனும் -
இராஜாவும், பிறரும் - மற்றுமுள்ளவர்களும், தேற
- (தன்னை
யோக்கிய னென்று) தெளியும்படியாக, பெரியது - பெரிதாகிய, ஓர் -
ஒரு, சபதம் - ஆணையை (அதாவது : வாக்கு
நிர்ணயத்தை,)
செய்தான் - பண்ணினான், எ-று.
இவ்வாறு சொன்னதை நம்பி
அரசன் பத்திரமித்திரனிடம் நீதி
செலுத்தாமல் மௌனமாயிருந்து விட்டான்.
(43)
267. பறையனிக் கள்வன் றன்னைப் பார்த்திப னென்னைப் போல
மறையவ னென்று கொண்டான் சபதத்தால் வஞ்சிப்
புண்டு
பிறரிவன் செய்கை யோரா ரென்னையே பித்த னென்னக்
குறையுண்டோ வென்று பின்னுங் கூப்பிட்டா னீதி யோதி.
(இ-ள்.) (அவ்வாறாகவே மேலும்)
பறையன் - சண்டாளனாகிய,
இக்கள்வன்றன்னை - இந்தத் திருடனை, பார்த்திபன் - அரசனானவன்,
என்னைப் போல் - முதலில் நம்பின என்னைப் போலவே, சபதத்தால்
- இவன் சொல்லிய உறுதி மொழியால்,
வஞ்சிப்புண்டு -
வஞ்சிக்கப்பட்டு, மறையவனென்று -
சரியான வேதந்தெரிந்த
பிராமணனென்று, கொண்டான் - நம்பிக் கொண்டான்,
(இவனே
இப்படியிருக்கும்போது) பிறர் - மற்றவர்கள், இவன் - இம்மந்திரியின்,
செய்கை - செய்கையை, ஓரார் - அறியாதவர்களாய், என்னையே -
என்றனையே, பித்தனென்ன - பைத்தியக்காரனென்று சொல்வதற்கு,
குறை - தவறுதல், உண்டோ - இருக்கின்றதோ, என்று
- என்று
சொல்லி, பின்னும் - திரும்பவும், நீதி யோதி - |