மாமதியும் - நிபுணமாமதி என்பவளும்,
போகி - சென்று, சுரும்பு -
வண்டுக்கூட்டங்கள், இருந்துறங்கும் -
தங்கித்துயில்செய்கின்ற,
தொங்கல் - புஷ்பமாலையை அணிந்திரா நின்ற, அமைச்சன் தன் -
அந்த மந்திரியினுடைய, மாடம் - மாளிகையை, துன்னி - அடைந்து,
விரும்பிவந்து - அவ்விடத்தில் தன்னை விரும்பி வந்து, அடைந்த
-
சேர்ந்த, பண்டகாரிக்கு -
அம்மந்திரியினுடைய பாண்டா
காரியாகியவனுக்கு, வேறு -
நடந்ததொன்றிருக்க வேறொரு
விஷயத்தை, சொன்னாள் - கீழ்வருமாறு சொன்னாள், எ-று. (62)
286. சித்திர மொத்த ராம தத்தையுஞ் சீய சேனுஞ்
சத்தியம் வைத்த நாமன் றன்னைமுன் னாணை யிட்டுப்
பத்திர மித்தி ரன்செப் புண்டெனிற் கொடுக்க
பார்மேல்
நித்தலு மிட்ட பூசல் நெடும்பழி விளைக்கு மென்ன.
(இ-ள்.) சித்திர
மொத்த - சித்திரப்பாவையை யொத்த,
ராமதத்தையும் - இராமதத்தா தேவியும், சீயசேனும் - சிம்மஸேன
மகாராஜனும், சத்தியம் வைத்த -
சத்திய மென்கிறபதத்தை
முன்னேவைத்திராநின்ற, நாமன்றன்னை - (பெயருள்ளவனாகிய)
சத்தியகோஷமந்திரிக்கு, முன் - எதிரில், ஆணையிட்டு - வாக்குறுதி
செய்து, பத்திரமித்திரன் -
பத்திரமித்திரனது, செப்பு -
இரத்தினச்செப்பு, உண்டெனில் - உண்டாயிருந்தால்,
கொடுக்க -
கொடுக்கக் கடவாய், பார்மேல் -
பூமியின்மேல், நித்தலும் -
நாடோறும், இட்ட - பத்திரமித்திரனால் செய்யப்பட்ட,
பூசல் -
இரைச்சல், நெடும் - பெரிய, பழி - பழியை, விளைக்கும் - உண்டு
பண்ணும், என்ன - என்று சொல்ல, எ-று. (63)
287. மத்தக மொத்த திண்டோண் மந்திரி சொன்ன வார்த்தை
வித்தக ருத்த மர்க்கும் வரும்பழி விலக்க லாகா
பத்திர பாகு வல்லி பரதற்கும் பரியொன் றாய
தித்தலத் தென்று நின்ற திந்திரோ பேந்தி ரர்க்கும்.
(இ-ள்.) மத்தகம்
- யானைமஸ்தகம்போன்ற, திண் -
கெட்டியாகிய, தோள் - புயத்தையுடைய, மந்திரி
- அமைச்சன்,
சொன்ன - பதில்சொன்ன, வார்த்தை - வசனமாவது,
வித்தகர் -
சாமர்த்திய புருஷர்களுக்கும், உத்தமர்க்கும் - உத்தமபுருஷர்களுக்கும்,
வரும் - வருகின்ற, பழி -
பழிச்சொல்லை, விலக்கலாகா -
தடைசெய்தல் முடியாது, பத்திரம் - பூஜ்ஜியமாகிய, பாகுவல்லி
-
பாகுபலி குமாரனுக்கு, பரதற்கும் - பரதராஜனுக்கும்,
இந்திரோ
பேந்திரர்க்கும் - இந்திரஸேன உபேந்திரஸேனரென்னும்
இரண்டு
இராஜகுமாரர்களுக்கும், பழியொன்றாயது -
உண்டாகிய ஒரு
பழியானது, இத்தலத்து - இவ்வுலகத்தில்,
என்றும் நின்றது -
எப்பொழுதும் வியாபித்து நின்றது, எ-று. (64)
இங்குக்கூறியவர்களின் விருத்தாந்தத்தை
ஸ்ரீபுராணத்தில்
அறிந்துகொள்க. |