பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 145


 

     (இ-ள்.)   (அதன்மேல்)   இடம்   பெரிதுடையவர்  -  பெரிய
ஏதுக்களை  அல்லது  மனோ வலிமையை யுடையவர்கள், தொடங்கிய
- செய்ய  ஆரம்பித்த,  பழியில்  காரியம் - பழியில்லாத செய்கையை,
முடித்தலால்  -  முடித்து   ஜெயம்  பெறுவதல்லாமல்,  விடார்கள் -
நடுவில் தளர்ச்சியடைந்து அதனை விடமாட்டார்கள், என்பது - என்று
சொல்வது,  மடங்கல்போல்  -  சிம்மத்தைப்போல,  நின்று - பலமாய்
நின்று,  இந்த  வணிகன்  -  இந்த  வர்த்தகன், மந்திரி - மந்திரியால்
செய்யப்பட்ட,  இடைஞ்சலை  -  பொல்லாங்கை, கடந்து - ஜெயிக்க,
இது  -  இந்தக்  காரியம்,  முடிந்தது  - முடிந்ததேயாகும், (அதாவது
இதுவே  அதற்குதாரணமாகும்),  என்றனர் - என்று அந்நகரத்திலுள்ள
ஜனங்கள் சொன்னார்கள், எ-று.                             (91)

வேறு.

 315. மத்தமால் களிறுபோகும் வழியினைக் குழித்து மாணப்
     பொய்த்தரை செய்து வீழ்த்துப் பிடித்திடும் புலையன் போலச்
     சத்திய கோட னென்னுஞ் சடத்தினாற் றன்னைத் தேற்றி
     வைத்திந்த வையத் தோடும் வஞ்சித்தா னென்னை யென்னா.

     (இ-ள்.) (அப்போது  அரசன்) மத்தம் - மதம் பொருந்திய, மால்
- பெரிதாகிய,  களிறு -  யானை,  போகும் - போகின்ற, வழியினை -
வழியை,    குழித்து  -  குழியாகச்செய்து,  மாண  -  மாட்சிமையாக,
பொய்த்தரை செய்து - மேல்பரப்புச் செய்து குழிதெரியாமல் மறைத்துத்
தரையாகவே  பொய்யாகக்  காட்டி, வீழ்த்து  -  அதில் யானைகளை
விழும்படிசெய்து,   பிடித்திடும்   -   பிடிக்கின்ற,  புலையன்போல -
புலையனைப்போல,    சத்திய    கோடனென்னும்    -     சத்திய
கோஷனென்கிற,  சடத்தினால்  - திரையினால் (மறைத்து), தன்னை -
தன்னை,  தேற்றிவைத்து - நல்லவனென்று   யாவர்களுக்கும் தெரியப்
பண்ணி,  இந்த  வையத்தோடும் - இந்த உலகிலுள்ள ஜனங்களையும்,
என்னை  -  என்னையும்,  வஞ்சித்தான் - ஏமாற்றினான்,  என்னா -
என்று, எ-று.                                            (92)

 316. கோபியா வரசு நீதிக் குறைபடா வகையி னான்மா
     பாவியா மிவனை நூலின் படியினாற் கடிக வென்ன
     நாபிகா லத்தி னிப்பா னடக்கின்ற வழக்கு நூலின்
     றீபிகா மனத்தி னார்கள் செய்வது தெரிந்து சொன்னார்.

     (இ-ள்.)  கோபியா  -  கோபமுற்று,  மா - பெரிய, பாவியாம் -
பாபிஷ்டனாகிய,  இவனை  -  இந்தச் சத்திய கோஷனை, அரசுநீதி -
இராஜ்ஜிய  நீதியில்,  குறைபடாவகையினால்  -  குறையாத  விதமாக,
நூலின்    படியினால்    -   சட்டத்தின்     பிரகாரம்,     கடிக -
தண்டிக்கக்கடவீராக,    என்ன    -    என்று   சொல்ல, நூலின் -
இராஜ்ஜியநீதிச்           சட்டங்களின்        ஆராய்ச்சியினாலே,
தீபிகாமனத்தினார்கள் - தீபிகை