148மேருமந்தர புராணம்  


 

பட்டான், (அதனால்), அரிவையர்க்கு - ஸ்திரீமார்களுக்கும், அன்புறும்
இளமைமூப்பில்    ஒருவன்   ஒத்தான்   -   அன்பு    பொருந்திய
இளமைப்பருவத்திலே      இனிமையையும்    முதுமைப்பருவத்திலே
வெறுப்பையும் உண்டாக்கும் ஒருவனை நிகர்த்தான், எ-று.       (97)

 321. மாயத்தால் செப்பை வவ்வி மந்திரி வணிகன் றன்னைப்
     பேயொத்துச் சுழலப் பண்ணிப் பெருந்துயர் முன்னஞ் செய்தான்
     மாயத்தாற் செப்புத் தன்கை வாங்கவும் பட்டுப் பின்னைப்
     பேயொத்துச் சுழன்று சாலப் பெருந்துயர் தானு முற்றான்.

     (இ-ள்.)  (அவனுடைய அந்நிலைமையைப்பார்த்து) மாயத்தால் -
மாயச்சாரத்தால், செப்பை - இரத்தினச் செப்பை, வவ்வி - அபகரித்து,
மந்திரி   -  மந்திரியானவன்,   வணிகன்றன்னை   -   செட்டியாகிய
பத்திரமித்திரனை, பேயொத்து - பேய்க்குச் சமானமாக, சுழலப்பண்ணி
- அலையும்படி   செய்து,   பெருந்துயர்  -  பெரிதாகிய துன்பத்தை,
முன்னம்  -  முன்னால்,  செய்தான்  -  பண்ணினான், மாயத்தால் -
மாயாச்சாரத்தால்,  செப்பு  -  அச்செப்பை,   தன்கை - தன்னுடைய
கையினின்றும்,  வாங்கவும் பட்டு - வாங்கி விடவும் பட்டு, பின்னை -
பிற்பாடு, பேயொத்து - பேய்க்குச்சமானமாகி, சுழன்று - சுழற்றி யுற்று,
சால  -  மிகவும்,  பெருந்துயர் - பெரிதாகிய  துன்பத்தை,  தானும் -
அம்மந்திரிதானும், உற்றான் - அடைந்தான், எ-று.             (98)

 322. மணியினால் வணிக னுக்கும் மந்திரி தனக்கும் வந்த
     தணிவிலாத் துயரம் பற்றின் றன்மையைச் சாற்றக் கண்டும்
     பணிவிலாத் துயர மாக்கும் பற்றினைப் பரியும் நல்ல
     துணிவிலா தார்க ளன்றே துயரங்கட் கிறைவ ராவார்.

     (இ-ள்.)  மணியினால்   -   இரத்தினத்தால்,  வணிகனுக்கும் -
வர்த்தக   னாகிய   பத்திர   மித்திரனுக்கும்,   மந்திரி  தனக்கும் -
இம்மந்திரிக்கும்,    வந்த    -   வந்துசேர்ந்ததாகிய,    தணிவிலா -
குறைவில்லாத (அதாவது  விலகாத),  துயரம் - துக்கமாகிய, பற்றின் -
ஆசையினது,    தன்மையை  -  ஸ்வபாவத்தை,  சாற்றக்  கண்டும் -
சொல்லக்கேட்டறிந்தும்,   பணிவிலா   -  குறைவில்லாத,   துயரம் -
துக்கத்தை,  ஆக்கும் - உண்டாக்கும்,  பற்றினை - ஆசையை, பரியும்
- கெடுக்கும்,   (அதாவது   நீக்கும்படியான),  நல்ல - நன்மையாகிய,
துணிவு  - நிச்சய   ஞானம்,  இல்லாதார்களன்றே - இல்லாதவர்களே,
துயரங்கட்கு  -  துக்கங்களுக்கும், இறைவராவார் - தலைவராவார்கள்,
எ-று.                                                  (99)

 323. பற்றினைப் பற்றி னாலே பற்றெனப் பற்றி னாரைப்
     பற்றுதா னிடும்பை நீருட் பரியட்டந் தன்னை யாக்கும்