பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 149


 

     பற்றினைப் பற்றி லாமை பற்றெனப் பற்றி னாரைப்
     பற்றுவிட் டிடும்பை நீருட் பரியட்ட மொழிக்குங் கண்டீர்.

     (இ-ள்.) பற்றினை - ஆசையை,  பற்றினாலே - ஆசையினாலே,
பற்றென  -  பற்றுப்போல  உறுதியாக, பற்றினாரை - பற்றியவர்களை,
பற்றுதான்   -   அவ்வாசையாகிறபற்றுத்தான்,   இடும்பை   நீருள் -
துக்கமாகிற  சமுத்திரத்துள்,  பரியட்டந்தன்னை - பரிவர்த்தனையாகிய
ஸம்ஸாரத்தை,  ஆக்கும்  -  உண்பெண்ணும், பற்றினை - ஆசையை,
பற்றிலாமை  -  பற்றாமையையே, பற்றென - பற்றுப்போல உறுதியாக,
பற்றினாரை  -  சர்ந்தவர்களை, பற்றுவிட்டு - அவ்வாசையாகிற பற்று
நீக்கி,   இடும்பை  நீருள்   -  துக்க  சமுத்திரத்துள்,  பரியட்டம் -
சுழல்வதாகிய மாற்றை, ஒழிக்கும் - நீக்கும், எ-று.

     கண்டீர் - முன்னிலை அசை.                        (100)

வேறு.

 324. மோக மேபிற விக்குநல் வித்தது
     மோக மேவினை தன்னை முடிப்பது
     மோக மேமுடி வைக்கெட நிற்பது
     மோக மேபகை முன்னை யுயிர்க்கெலாம்.

     (இ-ள்.) பிறவிக்கு - ஜனனமரண மாகிற ஸம்ஸாரத்துக்கு, நல் -
நன்மையாகிய,   வித்தது  -  விதையாவது,  மோகமே  -  மோகநீய
கர்மோதயமாகிய     ஆசையே,     மோகமே      -     அவ்வித
அஞ்ஞானத்தாலாகிய    ஆசையே,   வினைதன்னை  -  மற்றெல்லா
வினைகளையும்,  முடிப்பது  -  சேர்த்துப் பந்திப்ப தாகும், முடிவை -
தத்துவத்தின்   முடிவாகிய   மோக்ஷத்தை,   கெட  -  அடையாமல்
கெடும்படி, நிற்பது  -  தடையாக  நிற்பதும்,  மோகமே - மயக்கமே,
முன்னை    -    அனாதியாக,    உயிர்க்கெலாம்    -    ஸம்ஸார
ஜீவன்களுக்கெல்லாம், பகை  -  சத்துருவா  யிருப்பதும், மோகமே -
ஆசையினாலாம் அறிவில்லா மயக்கமேயாகும், எ-று.          (101)

 325. மோக மேதிரி யக்கிடை யுய்ப்பது
     மோக மேநர கத்தில் விழுப்பது
     மோக மேமற மாவது முற்றவும்
     மோக மேயற மாசுற நிற்பதும்.

     (இ-ள்.)   திரியக்கிடை    -   விலங்குகதியில்,    உய்ப்பது -
ஜீவன்களைச் சேர்ப்பது,  மோகமே - மயக்கமே, நரகத்தில் விழுப்பது
- நரகத்தில்    தள்ளுவதும்,    மோகமே   -  ஆசைக்காரணமாகிய
தன்மையே,  முற்றவும்  -  முழுதிலும், மறமாவது - பாபவினையாவது,
மோகமே  -  ஆசையே,  அறமாசுற  -  தர்மம்  கெட்டு நீங்கும்படி,
நிற்பதும் - இருப்பதும், மோகமே - ஆசையே, எ-று.          (102)