மக்க ளாயுகம் மாய்ந்த போழ்தினே 
             திக்க வாயுகம் சென் றுதித்ததே.  
           (இ-ள்.)   மிக்கு 
          நின்று   -   மிகுதியாக  நின்று,  
        எரி - 
        பிரகாசிக்கின்ற,  விளக்கு - தீபமானது, வீந்துழி - அவிந்தவிடத்தில், 
        அக்கணத்து   -   அப்பொழுதே,    இருள்  -  
        அந்தகாரமானது, 
        அடையுமாறு   போல்   -   சேர்வது   போல்,   
        மக்களாயுகம் - 
        மனுஷ்யாயுஷ்யம்,   மாய்ந்தபோழ்தினே  -  (அவ்வாறு)   நீங்கின 
        காலத்திலேயே,  திக்கவாயுகம் - திரியக்காயுஷ்யமானது,  சென்று - 
        அவனிடத்தே  புகுந்து,  (அதாவது வந்து), உதித்தது - தோன்றியது, 
        எ-று.                                                
        (108)  
       332. ஆயு வுங்கதி யைம்பொறி புவ்வி 
             நீச கோதமு நின்று தித்திடப் 
             போயம் மன்னவன் பொன்ன றையா 
             வாய னன்பெய ரகந்த னாகுமே.  
           (இ-ள்.)  (அவ்வாறு) 
         ஆயுவும்  -  திரியக்காயுஷ்யமும், கதி - 
        திரியக்கதிநாமமும்,  ஐம்பொறி  -  பஞ்சேந்திரிய ஜாதிநாமமும், 
        புவ்வி 
        - திரியக்கத்தியானு  பூர்வி  நாமமும், நீசகோதமும் - நீசகோத்திரமும், 
        (ஆகிய   இக்கர்மங்கள்),   நின்று - பந்தித்து   நின்று, 
         உதித்திட - 
        உதயஞ்செய்ய,  போய்  -  அம்மந்திரி  இறந்துபோய், அம்மன்னவன் 
        - அந்த  சிம்மஸேனவரசனுடைய, பொன்னறை  -  பாண்டாகாரத்தில், 
        பெயர்  அகந்தனாகும் - அகந்தனமென்னும் பெயராகின்ற, (அதாவது : பெயரையுடைய), 
        அரவாயினன் - சர்ப்பமாகப் பிறந்தான், எ-று.   (109)  
      வேறு  
       333. அரசன் மேற்கரு விற்பொரு ளாசையின் 
             மரீஇய மாயத்தின் மந்திரி மற்றிந்த 
             திரியக் காயினன் றீயவிச் செய்கையை 
             மருவு வாருள ரோமதி மாந்தரே.  
           (இ-ள்.)  அரசன்மேல் 
        - இராஜாவின் பேரிலேற்பட்ட, கருவில் - 
        த்வேஷத்தினாலும், பொருளாசையின் - பொருள்களின் மேலுண்டாகிய 
        ஆசையினாலும், மரீஇய  -  மருவிய  (அதாவது  சேர்ந்திரா  நின்ற), 
        மாயத்தின்  - மாயாச் சாரத்தினாலும், மந்திரி - ஸ்ரீபூதிமந்திரி, இந்த - 
        இப்படிப்பட்ட,  திரியக்காயினன்   -  விலங்கு  ஜாதியிற்  
        பிறந்தான், 
        மதிமாந்தர்   -  புத்திவந்தர்களுள்,   தீய    -    
        பொல்லாங்காகிய, 
        இச்செய்கையை   -   இப்படிப்பட்ட  ராகத்வேஷ  
        மோககாரியத்தை, 
        மருவுவார்  -  சேர்பவாக்ள், உளரோ  - உண்டோ,  (இல்லை), 
        எ-று.  
           மற்று - அசை.                                     
        (110)   |