334. அளவிலா நிதியை விட்டுப் பிறன்பொரு ளதனை மேவல் 
             களவுதா னிரண்டு கூறா மியல்புகா ரணங்க டம்மா 
             லளவிலாப் பொருளுண் டாயும் பிறன்பொருட் கிவற லாதி 
             களவுதான் கடைய தாகுங் கைப்பொரு ளற்ற வர்க்கே.  
           (இ-ள்.)   (மனிதர்) 
         அளவிலா  -  அளவில்லாத,   நிதியை - 
        ஐஸ்வரியத்தை,  விட்டு - தம்மிடமிருக்க  அதை வைத்துவிட்டு, பிறன் 
        பொருளதனை  -  அன்னியனது   திரவியத்தில்,  மேவல் 
         -  மனம் 
        பொருந்துதல்,  களவு - ஸாமான்னியத்தால்  களவென்றாகும், தான் - 
        அக்களவுதான்,     இயல்பு   காரணங்கள்    தம்மால் 
          -   காரிய 
        காரணங்களினால், இரண்டு  கூறாம் - காரியக் களவென்றும் காரணக் 
        களவென்றும்   இரண்டு    விதமாகும்,   (அவற்றுள்), 
          அளவிலாப் 
        பொருளுண்டாயும்        -       
        கணக்கிலாத       பொருள்கள் 
        தமக்குண்டாகியிருந்தும்,    பிறன்   பொருட்கு  -  
        அன்னியனுடைய 
        திரவியத்திற்கு,  இவறல் - இச்சிக்கின்றது, ஆதி - முதலிற் கூறப்பட்ட 
        காரியக்  களவாகும், கைப்பொருள் - தம் கைப்பொருள், அற்றவர்க்கு 
        - இல்லாதவர்களாகிய  தரித்திரர்களிடத்தி  லுண்டாகும், களவுதான் - 
        களவானது,  கடையதாகும்  -  இரண்டாவதாகிய காரணக் களவாகும், 
        எ -று.                                                 
        (111)  
       335. இயல்பினாங் களவி னார்கட் கினியவாஞ் செய்கை யொன்று 
             முயலுறா மனத்த ராகி வாங்குவ நிறைய வாங்கிக் 
             குயலராய்க் கொடுப்ப வெல்லாங் குறையவே கொடுத்த லாகு 
             முயலுறா ரிவைசெய் யாதே யொருபக லொழிய மேலும். 
       
           (இ-ள்.)   இயல்பினாங் 
         களவினார்கட்கு   -   காரியக்களவை 
        யுடையவர்களுக்கு,  இனியவாம்  -  இனிமையாகிய, செய்கை ஒன்றும் 
        - செய்கைகளில்   ஒரு   காரிய   மேனும்,   (அதாவது 
          நீதியோடு 
        பொருந்திய   காரியங்களில்   ஒன்றையேனும்),  முயலுறா 
         -  செய்ய 
        முயற்சிக்காத,  மனத்தராகி  -  மனத்தையுடையவர்களாகி  (அதாவது 
        அநீதி   பொருந்திய  மனமுடையவர்களாகி),  வாங்குவ  -  
        தாங்கள் 
        வாங்குமவைகளை   எல்லாம்,   நிறைய   -   அதிகமாக,  
        வாங்கி - 
        கிரகித்து,   குயலராய்  -  லோப  புத்தியுடையவர்களாய், 
          கொடுப்ப 
        எல்லாம்  -  தங்களால்   கொடுக்கப்படும்  பொருள்களை 
         எல்லாம், 
        குறையவே  -  குறைவாகவே, கொடுத்தலாகும்  -  கொடுத்தல் 
        உரிய 
        தொழிலாகும்,   இவை  செய்யாதே  -  இப்படிப்பட்ட காரியங்களைச் 
        செய்யாமல்,  ஒரு  பகலொழிய  -  ஒரு நாளாகிலும் நீங்க, மேலும் 
        - 
        மேலே,   (அதாவது   மேலும்  வேறே  காரியங்களில்),  
        முயலுறார் - 
        முயற்சி  செய்யமாட்டார்கள்,  (அதாவது  ஒரு  நாளேனும்  
        தவறாமல் 
        தினந்தோறும் மோசத் தொழில்களையே புரிவர்), எ-று.          (112) 
        |