பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 157


 

நிறைந்து,  இலங்கும் விளங்குன்ற,  அதிங்கவனம் - அதிங்கவனத்தில்,
விரகில்  -  உத்சாகத்தினால், சென்று - போய், புக்கான் - புகுந்தான்
எ-று.                                                  (119)

 343. விமலகாந் தார மென்னும் விலங்கலை யிலங்க வேறி
     யமலமா யிலங்குஞ் சிந்தை யருந்தவன் வரதன் மாவின்
     கமலமா யிலங்கும் பாதம் கைதொழு திறைஞ்சி வாழ்த்தித்
     திமிரமாம் வினைக டீரத் திருவற மருள்க வென்றான்.

     (இ-ள்.)  (அவ்வாறு சென்ற அவன்) விமலகாந்தார மென்னும் -
விமல    காந்தார    மென்னும்   பெயரையுடைய,    விலங்கலை -
(அவ்வனத்தில்  உள்ள)  பர்வதத்தில், இலங்க - தன் அழகு விளங்க,
ஏறி  -  ஏறிப்போய்,  அமலமாய்  -  நிர்மல  காரமாகி, இலங்கும் -
விளங்கும், சிந்தை - தியானத்தையுடைய, அரும் - அரிதாகிய, தவன்
- தபசையுடையவனான,   வரதன்மாவின்    -  வரதர்ம  னென்னும்
பெயரையுடைய  முனிவரனது,  கமல  மாய் - தாமரை புஷ்பமாகவே,
(அதாவது   அதைப்போல),   இலங்கும்   விளங்குகின்ற,   பாதம் -
பாதங்களை,   கைதொழுது  -  கைகுவித்து,  இறைஞ்சி  - வணங்கி,
வாழ்த்தி   -  ஸ்தோத்திரம்   பண்ணி,  திமிரமாம் - அஞ்ஞானாந்த
காரத்தனாலாகிய,  வினைகள் - கர்மங்கள்,  தீர - நீங்க, திருவறம் -
அழகிய  ஜின  தர்மத்தை,  அருள்க - சொல்லக் கடவீராக, என்றான்
- என்று அவரிடம் கேட்டான், எ-று.                        (120)

 344. அறிவுநற் காட்சி காந்தி சாந்திநல் லடக்க மைந்து
     பொறிகளிற் செறிவு குத்தி சமிதியும் பொருந்தி யாசை
     வறுவிய மனத்துத் தண்டங் காரவஞ் சன்னை வீந்த
     உறுதவ னுரைக்க லுற்றா னுவந்தவன் கேட்க லுற்றான்.

      (இ-ள்.)  (அவ்வாறு கேட்டபோது) அறிவு - சம்மியக்ஞானமும்,
நற்காட்சி  -  சம்மியக்  தரிசனமும், காந்தி  - சம்மியக் சாரித்திரமும்,
சாந்தி     -    உபசாந்தியும்    (அதாவது :    ப்ரசமம்   அல்லது
க்ஷமாபரிணாமமும்),   நல்லடக்கம்   -   நன்மையாகிய  ஸம்யமமும்
(அதாவது   பிராணி  ஸம்யமம்   ஆறும்  விஷய  ஸம்யம்  ஆறும்),
ஐந்துபொறிகளில்   செறிவு   -  பஞ்சேந்திரிய  விஷயங்களில் ராகத்
வேஷமில்லாமையும்,   குத்தி   -   திரிகுப்தியும்,   சமிதியும் - பஞ்ச
சமிதியும்,   பொருந்தி   -   ஆகிய  இவைகளில் சேர்ந்து, ஆசை -
இகபரங்களில்  அன்னிய  திரவியா  பேட்சையை,  வறுவிய - நீக்கிய,
மனத்து   -   ஸ்வாத்மத்தியான   மனதையுடையவனும்,   தண்டம் -
மனோவாக்  காயுதண்டங்களும், காரவம் - ரஸ  ரித்தி சாதுவென்னும்
திரிகாரவங்களும், சன்னை  -  ஆஹாரபய  பரிக்கிரகஸ்திரீ  என்னும்
சதுஸ்ஸன்னைகளும், வீந்த  -  நீங்கியவனுமாகிய, உறு - பெரிதாகிய,
தவன்   -  தபசையுடைய  வாதர்ம  முனிவன்,   உரைக்கலுற்றான் -
சொல்லத்  தொடங்கினான், அவன்  - அப்பத்திரமித்திரன், உவந்து -
சந்தோஷித்து, கேட்கலுற்றான் - கேட்கத் தொடங்கினான், எ-று.  (121)