345. கருணையு மறிவு முண்டி யுறையுளு மீதல் காம
மருளிலா விறைவன் பாதம் சிறப்பொடு வணங்கன் மைய
லிருளறத் தெளிதல் வென்றோர்க் கிறைவன தறத்தைச்
சீல
மருவிநின் றொழுகல் மாற்றிற் சுழற்றிதீர் மருந்தி தென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
சொல்லத் தொடங்கிய முனிவன்)
கருணையும் - ஸ்தாவர சங்கமாதி சகல ஜீவன்கள் பேரில்
தயவும்,
அறிவும் - ஞானத்திற்குக் காரணமாகிய சாஸ்திரமும்,
உண்டி -
பவித்திராஹாரமும், உதையுளும் - ஆவாஸமும் ஆகிய
இந்த
நால்வகையாகிய தானங்களை, ஈதல் - பாத்திரமறிந்து கொடுத்தலும்,
காம மருளிலா - ஆசையு மயக்கமுமில்லாத, இறைவன் - வீதராக
சர்வஜ்ஞனுடைய, பாதம் - பாதங்களை, சிறப்பொடு - பூஜையோடு,
வணங்கல் - வணங்குதலும், வென்றோர்க்கு
- இந்திரிய
ராகத்வேஷங்களை ஜெயித்த கணதராதி
முனிவர்களுக்கு,
இறைவனது . தலைவனாகிய ஸ்வாமியினால்
சொல்லப்பட்ட,
அறத்தை - ஜீவாதி தத்துவ தர்மத்தை,
மையல் இருளற -
மயக்கமாகிய இருள் நீங்க, தெளிதல் -
தெளிவதும், சீலம் -
விரதங்களை, மருவிநின்று -
சேர்ந்துநின்று, ஒழுகல் -
நடக்கின்றதும், (ஆகிய) இது - இந்தத் தானம் பூஜாஸம்மியக்த்வ
சீலங்கள் பொருந்திய தன்மை, மாற்றில் - ஸம்ஸாரத்தில்
ஏற்படும்,
சுழற்றி - சுழற்சியை, தீர் - நீக்குகின்ற, மருந்து
- ஒளஷதமாகும்,
என்றான் - என்று சொன்னான், எ-று.
346. வதங்கள்பன் னிரண்டு மேவி வையகத் துயிர்கட் கெல்லா
மிதஞ்செய்து வருந்தில் வெந்தீ யிடுவெண்ணெய் போன்றி ரங்கிச்
சிதைந்தின்னா தனசெய் தார்க்கு மினியவே செய்து சிந்தைக்
கதங்கடிந் தொழுக னல்லோர் கருணையைக் கொடுத்த லாமே.
(இ-ள்.)
(அவ்வாறு சொல்லி மேலும்) நல்லோர்
-
ஸம்மியக்த்வத்தையுடையவர்கள், வதங்கள் பன்னிரண்டு மேவி
-
த்வாதச விரதங்களைப் பொருந்தி, வையகத் துயிர்கட்கெல்லாம்
-
இவ்வுலகிலுள்ள சகல ஜீவன்களுக்கும், இதஞ்செய்து - நன்மையைச்
செய்தும், வருந்தில் - ஜீவன்கள் வருந்துமே யானால், வெந்தீயிடு -
வெப்பம் பொருந்திய அக்னியில்வைக்கப்பட்ட,
வெண்ணெய்
போன்று - வெண்ணெயானது
உருகுவதுபோல, இரங்கி -
மனதிரங்கியும், சிதைந்து - அறிவு கெட்டுக் கோபித்து, இன்னாதன
- துன்பம் தருபவைகளை, செய்தார்க்கும்
- தமக்குச்
செய்தவர்களுக்கும், இனியவே -
நன்மைகளையே, செய்து -
செய்தும், சிந்தை - மனதில், கதம் - கோபத்தை, கடிந்து
- நீக்கி,
ஒழுகல் - நடத்தலும், கருணையை - ஜீவ தயவாகிய அபயதானத்த,
கொடுத்தல் ஆம் - கொடுப்பதாகும், எ-று. (123)
347. இங்கியல் மூட மென்னு மிருளினைத் துறந்து கொண்டு
வெங்கதிர் போலத் தோன்றி மெய்ம்மையை விளக்கி நிற்கு |