பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 159


 

     மங்கபூ வாதி நூலி னறிவினைச் செறியச் செய்தன்
     மங்கலத் தொழிலி னார்க்கு மதியினைக் கொடுத்த லாமே.

     (இ-ள்.)  இங்கியல்  - இவ்வுலகிற் பொருந்திய, மூடமென்னும் -
லோக    தேவபாஷண்டமாகிய    திரிமூடமென்னும்,   இருளினை -
அந்தகாரத்தை,  துறந்து  -  நீக்கி, கொண்டு  - ஆகமஞானங்களைக்
கொண்டு,  வெம்  - விருப்பத்தைச்  செய்கின்ற,  கதிர்போல  - பால
சூரியனைப்போல,  தோன்றி  -  உண்டாகி, மெய்ம்மையை - உண்மை
ஸ்வரூபத்தை, விளக்கி  நிற்கும் - பிரகாசிக்கச் செய்துநிற்கின்ற, அங்க
பூவாதிநூலின்   -   த்வாதசாங்கம்   சதுர்த்தச    பூர்வ  முதலாகிய
சாஸ்திரங்களினால்,   மங்கலத்  தொழிலினார்க்கு  -  புண்ணியத்தை
யடையும்    பக்குவிகளுக்கு,   அறிவினை    -   ஸ்ரீத ஞானத்தை,
செறியச்செய்தல்        -      சேரும்படியாகச்       செய்விப்பது,
மதியினைக்கொடுத்தலாம்    -   அறிவைக்  கொடுத்தலாகிய சாஸ்திர
தானமாகும், எ-று.                                       (124)

 348. உடம்புணர் வொழுக்கங் காட்சி யுவகைநல் லின்பம் வாணாள்
     விடங்கொளி வீரம் வீடு மெய்த்தவந் தருமஞ் சீல
     மடங்கலு மீந்தா னுண்டி யீந்தவ னதனால் வையத்
     துடம்புகொண் டவர்கட் குண்டி போல்வதோ ருதவி யின்றே.

     (இ-ள்.)  உண்டி  -  பவித்திரமாகிய ஆஹாரத்தை, ஈந்தவன் -
கொடுக்கின்ற   தாதாவானவன்,   உடம்பு   -   சரீரமும், உணர்வு -
ஞானமும்,  ஒழுக்கம் - சாரித்திரமும், காட்சி - தர்சனமும், உவகை -
சந்தோஷமும்,  நல்  -  நன்மையாகிய,  இன்பம்  -  சௌக்கியமும்,
வாணாள்  -  ஆயுஷ்யமும்,  விடங்கு  - அழகும், ஒளி - தேஜஸும்,
வீரம்   -  பராக்ரமமும்,   வீடு   -   மோக்ஷமும்,   மெய்த்தவம் -
உண்மையாகிய தபசும்,  தருமம்  -  தருமமும்,  சீலம் - சீலாசாரமும்,
(ஆகிய)   அடங்கலும்   -   இவைகள்   முழுமையும்,   ஈந்தான் -
கொடுத்தவனாவான்,  அதனால் - அதனாலே,  வையத்து இவ்வுலகில்,
உடம்புகொண்டவர்கட்கு  -  சரீரத்தை   எடுத்தவர்களுக்கு,   உண்டி
போல்வது   -  ஆகாரத்தைப்போல்வதாகிய,  ஓருதவி  -  வேறொரு
உபகாரமானது, இன்று - இலதாகும், எ-று.

     விடங்கம் என்பது விடங்கு என விகாரப்பட்டு நின்றது.    (125)

 349. ஊனொடு தேனுங் கள்ளு மின்றிநன் றாயு வுண்டி
     தானுவந் தெவர்க்கு மீதல் தாமைந் தானு மூன்றா
     மூனுணுங் கொடுமை யார்க்கு முடன்பட்டு மூனு ணார்க்கும்
     மானமா தவர்க்கு மீதல் வரிசையாற் பெருகு மூன்றும்.

     (இ-ள்.) ஊனொடு மாம்சத்தோடு, தேனும் - மதுவும், கள்ளும் -
கள்ளும்,  (ஆகிய  மாம்ஸ  மது மத்தியமென்னும் மூன்றும்), இன்றி -
இல்லாமல்,