|   நின்ற  சர்வஜ்ஞனுடைய,  தன்மையை .  ஸ்வரூபத்தை, 
        (மனிதன்) தன் 
        கண்   -   தன்னிடத்தில்,  வைத்து   -  
        ஸ்தாபித்து, நினைதலுக்கு - 
        தியானிப்பதற்கு, ஏது - காரணமானது, நல்ல - நன்மையாகிய, சிறப்பு - 
        பூஜையாகும்,  அது - அத்தன்மையானது,  வினையை - கருமங்களை, 
        கனவி - அக்கினியானது,  சேர் - தன்னிடத்தில் சேரப்பட்ட,  கனகம் 
        தன்கண் - ஸ்வர்ணத்தினிடத்தேயுள்ள, காளத்தை - கிட்டகாளிதத்தை, 
        சுழற்றுமாறு - நீக்குவதுபோல, நீக்கும் - கொடுக்கும், எ-று.  
           தனை - சாரியை.                                   (131) 
       
       355. இறைவனு முனியு நூலு மியாதுமோர் குற்ற மில்லா 
             நெறியினைத் தெளிதல் காட்சி யாமது நிறுத்தும் 
        வீட்டி 
             னிறுகுமெண் மயமும் மூட மாறு தீவினய மின்றி 
             நெறிவிளக் குறுத்த லாதி யெட்டங்க நிறைந்த தென்றான். 
       
           (இ-ள்.)   இறைவனும் 
         -  ஸ்வாமியையும், (அதாவது ஆப்தன் 
        அல்லது   பரமாத்ம   ஸ்வரூபியையும்),  முனியும்  - 
        குருக்களையும் 
        (அதாவது   அந்தராத்ம   ஸ்வரூபிகளையும்),    
        நூலும்   -   சகல 
        பதார்த்தங்களினது   ஸ்வரூபத்தைச்   சொல்லும்  பரமாகமத்தையும், 
        யாதும் - எதிலும்,  ஓர் குற்றமில்லா - ஒரு குற்றமில்லாத, நெறியினை 
        - யதா  ஸ்வரூபத்தையும், தெளிதல்  -  தெளிகின்றது, காட்சியாம் 
        - 
        ஸம்மியக்   தரிசனமாகும்,   அது  -  அந்தத்தெளிந்த 
          தன்மையே 
        (அதாவது  ஸம்மியக்துவமே),  வீட்டின் -  மோக்ஷத்தில், நிறுத்தும் 
        - 
        ஸ்தாபிக்கும்,   (இன்னும்   அந்த  ஸம்மியக்த்வமானது),  
        இறுகும் - 
        சேர்ந்திரா   நின்ற,   எண்மயம்   -  
         அஷ்டமதமும்,  மும்மூடம் - 
        திரிமூடமும்,  ஆறு  தீவினயம்  - அவிநயமாறும் (ஆகிய இவைகள்), 
        இன்றி   -   இல்லாமல்,   நெறி   விளக்குறுத்தலாதி 
          -  மார்க்கப் 
        பிரபாவனை   முதலாகிய,   எட்டங்கம்   -  
        அஷ்டாங்கங்களினால், 
        நிறைந்தது - நிறைவு பெற்றதாகும்,  என்றான் - என்றும் சொன்னான், 
        எ-று.  
           ஸம்மியக்த்வம்  அல்லது  
        ஸம்மியக்  தரிசனம் என்பதனையும், 
        இதனது   தோஷங்களையும்,  அங்கங்களையும்,  பதார்த்த சாரத்தில் 
        ஸம்மியத்து மார்க்கணாதி காரத்தில் விரிவாகக் காணலாம்.      (132) 
       
      வேறு  
       356. பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல் 
             பொருள்வரைதல் மத்தமது புலைசுணலி னீங்கல் 
             பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல் 
             மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம். 
       
           (இ-ள்.) பெரிய - கொலை 
        - த்ரஸ ஜீவவதை, பொய் - பொய், 
        களவு    -    திருட்டு,   பிறர்   மனையில் 
          ஒருவல் - அன்னிய 
        ஸ்திரீகளைச்சேரல் ஆகிய இவற்றி   |