174மேருமந்தர புராணம்  


 

   சொல்லு மெய்யு மறந்தனர் சோர்ந்தனர்
   மல்லி யங்கு புயத்திரண் மைந்தரும்.

   (இ-ள்.)   (அவ்வாறு   அரசன்  வீழ்ந்த மாத்திரத்தில்) கல்லென் -
கல்லென்கிற, ஓசை  -      சப்தமானது,   கடல்   -  சமுத்திரம்,
உடைந்திட்டென  -    கரையையுடைத்துப்   புறப்பட்டது    போல,
எல்லையின்றி  -   மட்டில்லாமல்,  எழுந்தது  -  (அரண்மனையில்)
உண்டானது,   மல்   இயங்கும்  -   மல்ல   யுத்தத்தில்  தேர்ந்து
விளங்காநின்ற,திரள் - திரண்ட,புயம் - புயங்களையுடைய, மைந்தரும்
- அரச  குமாரர்களிருவரும், யாவரும் - அங்குள்ள மற்ற எவர்களும்,
சொல்லும்  -   வசனமும்,   மெய்யும்   -  சரீரமும், சோர்ந்தனர் -
சோர்ந்தார்கள், எ-று. (21)

 378. இராம தத்தையு மின்னுயி ரன்பினால்
     விராம முற்றதோர் மஞ்ஞையின் வீழ்ந்தனள்
     கரா மறிக்கடல் சூழ்படிக் காவல
     னிராமை யாற்பக லும்மிர வாயதே.

    (இ-ள்.)  (அப்போது)  இராமதத்தையும் -  இராமதத்தாதேவியும்,
இன்  -   இனிமையாகிய,  உயிர்  -  உயிர்போன்ற,  அன்பினால் -
ஆசையினாலே,விராமம் - ஆயுள்முடிவை, உற்றது - அடைந்ததாகிய,
ஓர் - ஒரு, மஞ்ஞையின் - மயில்போல,வீழ்ந்தனள் - வீழ்ந்தாள், கரா
- முதலைகள்  தங்கியிருக்கின்ற,  மறி  -  சுழலப்பட்ட,  கடல்சூழ் -
சமுத்திரம்  சூழ்ந்த,  படிக்காவலன்  - இப்பூமியைக் காக்கும்படியான
அரசன், இராமையால் - நல்ல நிலைமையாக இல்லாததனாலே, பகலும்
- பகற்பொழுதும், இரவாயது - இராத்திரிக்கு ஒப்பாகியது, எ-று.

   விராமம் - என்பதற்கு, அம்பு எனவும் பொருளுரைக்கலாம். (22)

 379. கருட னாயவன் காலிலி கட்கெலாங்
     கருட தண்டனென் பானக் கணத்திலே
     மருவி மந்திர மோதவு மன்னனுக்
     கிருள் பரந்துயி ரேகிய தேகலும்.

  (இ-ள்.) காலிலிகட்கெலாம் - பாதமில்லாத சர்ப்பங்களுக்கெல்லாம்,
கருடனாயவன்      -      கருடனுக்குச்     சமானமானவனாகிய,
கருடதண்டனென்பான்       -    கருடதண்டனென்னும்      ஒரு
1காருடியானவன், அக்கணத்திலே - அப்பொழுது, மருவி -  சேர்ந்து,
மந்திரம் - கருடமந்திரத்தை, ஓதவும்  -  ஜெபிக்கவும்,  (தணியாமல்)
மன்னனுக்கு - அரசனுக்கு,இருள்பரந்து - கரியவிஷமானது வியாபித்து,
______________________________________________
1காருடி - கருடமந்திரம் கற்ற மந்திரவாதி.