பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 183


Meru Mandirapuranam
 

னாய்   -   குணத்தையுடையவனே!,   பொருந்திய   -  நம்மிடத்தே
சேர்ந்திருக்கின்ற,   செல்வம்   -   இராஜ    சம்பத்தும்,  சுற்றம் -
பந்துத்துவமும்,   புற்புதம்போல  -  நீர்க்குமிழியைப்போல, மாயும் -
விநாசமாகும்,  (ஆதலால்)  நீ  -  நீ, திருவறம் - ஸ்ரீஜிந தருமத்தை,
மறவல் - மறந்துவிடாதே, என்றாள் - என்று சொன்னாள், எ-று. (42)

 399. என்றலு மஞ்சி நெஞ்சத் திளஞ்சிங்க நடப்ப தேபோற்
     சென்றவன் பணிந்தெ ழுந்து செப்பிய தென்கொ லென்ன
     மின்றிகழ் பூணி னாய்மேல் விழுத்தவந் தொடங்கி நோற்றற்
     கொன்றிய துள்ள மென்ன வுருமுற்ற நாக மொத்தான்.

   (இ-ள்.)  என்றலும் - என்று அவள் சொல்லியவுடனே, நெஞ்சத்து
-  மனத்தில்,  அஞ்சி  -  பயந்து,  இளஞ்சிங்கம்  -  இளமையாகிய
சிம்மமானது,  படப்பதேபோல்  - செல்வதுபோல, அவன்  - அந்தச்
சிம்மச்சந்திர  குமாரன், சென்று  -  தாயினருகிற்போய்,  பணிந்து  -
வணங்கி,  எழுந்து  -  எழுந்து  நின்று  (தாயே!),  செப்பியது  - நீ
சொல்லியது,  என்கொல்  -  யாது? ( அதனை எனக்கு  விவரமாகச்
சொல்வாயாக),   என்ன  -  என்று  கேட்க,  (அவள்)  மின்திகழ் -
மின்னலைப்   போன்ற   பிரகாசம்   விளங்குகின்ற,   பூணினாய்  -
ஆபரணங்களை  யணிந்த  குமாரனே!, மேல்  - இனி, விழுத்தவம் -
பரிசுத்தமாகிய   தபஸை,  தொடங்கி  -  ஆரம்பித்து, நோற்றற்கு  -
நோற்பதற்கு,  உள்ளம் - என்மனமானது,  ஒன்றியது - பொருந்தியது,
என்ன - என்றுசொல்ல (அவன்), உருமுற்ற - இடியிலகப்பட்ட, நாகம்
ஒத்தான் - சர்ப்பத்தை நிகர்த்துக் கலங்கி வீழ்ந்தான், (எ-று.) (43)

 400. கடகமு முடியுஞ் சிந்தக் கற்பகம் போல வீழ்ந்து
      படிமிசைக் கிடந்த வீரன் பரிசனந் தேற்றத் தேறி
     அடியனேன் பிழைத்த தென்கொ லடிகணீர் துறத்தற் கென்ன
      நெடிதுநீ ருரைய னீங்கள் பிழைத்ததொன் றில்லை யென்றாள்.

    (இ-ள்.)  கடகமும் -  அஸ்தகங்கணமும்,  முடியும் - கிரீடமும்,
சிந்த  -  சிதற,  கற்பகம்போல  - கற்பக மரத்தைப்போல, வீழ்ந்து -
கீழே  வீழ்ந்து,  படிமிசை  -  பூமியின்மேல்,  கிடந்த - மூர்ச்சித்துப்
படுத்திருந்த,  வீரன்   -  வீரபுருஷனாகிய  சிம்மச்   சந்திரகுமாரன்,
பரிசனம்  -  தன்னுடைய  பரிவார  ஜனங்கள்,  தேற்ற  -  தன்னை
மூர்ச்சை  தெளிவிக்க,  தேறி - தெளிந்து, (இராமதத்தையை நோக்கி)
அடிகள் - அடிகளே!, நீர் துறத்தற்கு - நீர் இவ்வாறு துறவடைவதற்கு,
அடியனேன்  -  அடியேனாகிய  யான்,  பிழைத்தது - தவறிச் செய்த
காரியம்,  என்கொல்  என்ன -  யாது என்று வினவ, (அதற்கு அவள்
வனையும்,  தன்னுடைய  மற்றொரு  பிள்ளையையும்  நோக்கி), நீர் -
நீங்கள், நெடிது  உரையல் - அதிகமாக ஒன்றுஞ் சொல்லவேண்டாம்,
நீங்கள் பிழைத்தது - நீங்கள் தவறிச் செய்த காரியம்,