பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 189


Meru Mandirapuranam
 

போழ்து  - சேர்ந்த  காலத்தில்,  வீட்டை - சம்ஸார விடுதலையாகிற
மோட்சமென்னுங்  கனிதலை,  கனியும் . பழுக்கும், எ-று.

   பான்மை இயற்கையிற் பழுத்தலாவது ஒருவன் உபதேசமில்லாமல்
தபஸைக்கொண்டு   வீடு   அடைதலாம்.    அது     தவத்தினால்
பழுக்குமென்றது, ஒருவன் உபதேசத்தால்  தபஸைக்  கைக்கொண்டு
வீடு அடைதலாம். (54)

 411. மெய்த்தவத் தன்மை தானும் வென்றவர் படிமந் தாங்கிச்
     சித்தமெய் மொழிகண் மூன்றிலிருதொடர்ப் பாட்டினீங்கிப்
     பத்தறம் பன்னி ரண்டாந் தவத்தொடு பயின்று தன்கண்
     உத்தமக் காட்சி ஞானவொழுக்கத்தையழுத்தல் கண்டாய்.

   (இ-ள்.)   மெய்  -  உண்மையாகிய,  தவம்   -  தபஸினுடைய,
தன்மைதான் - குணமானது,  (யாதென்றால்ஒருவன்),    வென்றவர் -
காதிகர்மங்களை  ஜெயித்திரா  நின்ற  அருக பரமனுடைய, படிமம் -
ரூபமாகிய  நிர்க்கந்த  ரூபத்தை,  தாங்கி -  தரித்து,  சித்தம்  மெய்
மொழிகள் மூன்றில் - மனம் காயம்  வசனம் என்னும் மூன்றினாலும்,
இருதொடர்ப்பாட்டின்  -  பாஹியாப்பியந்தர   மென்னும்   இரண்டு
பரிக்கிரகங்களினின்றும்,  நீங்கி  -  விலகி,  பத்தறம் பன்னிரண்டாந்
தவத்தொடு - தசதர்மமும்  துவாதச  வித தபஸுமாகிய இவற்றோடும்,
பயின்று -  பழகி, தன்கண் -  தன்னிடத்தில்,  உத்தமம் -  மேலான,
காட்சி - நிச்சய  தரிசனத்தையும்,  ஞானம் -  சுத்த  ஞானத்தையும்,
ஒழுக்கத்தை -சுத்த ஸ்திதி ஸ்வரூப லக்ஷணமாகிய  சாரித்திரத்தையும்,
அழுத்தல் - ஸ்தாபித்தலாம், கண்டாய் -  நீ  இவற்றைத்   தெரிந்து
கொண்டனையா? எ-று.

     கண்டாய் என்பது ஒருவகை அசையுமாம். பாஹியபரிக்கிரக 10,
அப்யந்தர      பரிக்கிரகம்  14.    இவற்றின்   விவரத்தை ஆகம
பேர்வழியென்னும்   புத்தகத்திற்     கண்டுகொள்க.   தான், உம் -
அசைகள். (55)

 412. தானெனப் படுவ தெட்டு வினைவிட்ட தன்மை தன்க
     ணூனமி லனந்த நான்மை யிருமையு மொருமை யாக்கி
     யானென தென்ன நீங்கும் வினையன்றி யாக்கை சுற்றம்
     யானென தென்ன நீங்கா தெண்வினைத் தொடரு மென்றான்.

    (இ-ள்.)  தான்  எனப்படுவது  - தான் என்று சொல்லப்படுவது,
எட்டு   வினை   -   அஷ்ட   கர்மங்களாம்,  விட்ட  தன்மை  -
அவற்றினின்றும்  நீங்கிய  தன்மையாவது, தன்கண் - தன்னிடத்திலே,
ஊனமில் -  குற்றமில்லாத,  அனந்த   நான்மை - அனந்த ஞானாதி
அனந்த சதுஷ்டய குணங்கள் பொருந்தி யிருத்த