லாம், இருமையும் - தான் என்கிற சுத்தாத்ம திரவியமும் அதன்
குணமாகிய அனந்த ஞானாதியும் ஆன குணிகுணங்களை,
ஒருமையாக்கி - அபேத விவக்ஷையாக்கி, யான் - இந்த
ஆத்மத்ரவியம் நானே, எனது - இந்த அனந்த ஞானாதிகுணம்
என்னுடையதே, என்ன - என்று பாவனைசெய்து ஸ்வானுபூதியாக
அறிய, வினை - அஷ்டகர்மங்கள், நீங்கும் - ஆத்மனை
விட்டகலும், அன்றி - அப்படியல்லாமல், யாக்கை - எடுத்திராநின்ற
சரீரம், யான் - நானே, சுற்றம் - பந்துக்களாதியான சமூகம், எனது -
என்னுடையதே, என்ன - என்று உபசரிதா னுபசரித அசத்பூத
வியவகாரமான அசுத்த பரிணாமத்தால் எண்ண, எண்வினைத்
தொடரும் - அஷ்டகர்மங்களின் சேர்க்கையும், நீங்காது -
ஆத்மனைவிட்டகலாது, என்றான் - என்று முனிவரன்
சொன்னான், எ-று. (56)
413. என்றலு மெனதும் யானு மிவையென மயங்கிக் கீழ்நா
ணின்றியான் கதிக ணான்கிற் சுழன்றன னெறி யறிந்த
வின்றுநா னிவற்றி னீங்கா தொழிவனே லென்க ணீங்கா
தொன்றினா லொன்று நில்லா தொழிகவித் தொடர்ச்சி யென்றான்.
(இ-ள்.) என்றலும் - என்று முனிவரன் சொல்லவும், எனதும் -
என்னுடையதும், யானும் - நானும், இவையென - முன்சொன்ன
பந்துக்களாதியும் இச்சரீரமுமான இவைகளேயென்று, மயங்கி -
(உபசரித அனுபசரித அஸத்பூத நயங்களில்) பிரமித்து, கீழ்நாள் -
கடந்த நாட்களில், நின்று - (சுத்த நிச்சய நயம் தெரியாமல்) நின்று,
யான் - நான், கதிகள் நான்கில் - சதுர்க்கதிகளில், சுழன்றனன் -
பிறப்பிறப்புக்களினாற் சுழற்சி யடைந்தேன், நெறி அறிந்த - (நீர்
ஸ்வரூபங்களைச் சொல்ல அவற்றால்) நன்மார்க்கத்தினைத் தெளிந்த,
இன்று - இப்பொழுது, நான் - யான், இவற்றின் - இவற்றினின்றும்,
நீங்காதொழிவனேல் - விலகாமற் போவேனாயின், என்கண் -
ஆத்மனாகிய என்னிடத்தே, நீங்கா - அக்கருமங்கள் விலகமாட்டா,
ஒன்றினால் - (நான் ஆத்ம குணங்களில்) பொருந்தினால், ஒன்றும்
- யாதொரு வினையும், நில்லாது - நிற்கமாட்டாது, (ஆகையால்),
இத்தொடர்ச்சி - இந்த அன்னியத் திரவியப்) பற்று, ஒழிக -
என்னைவிட்டு நீங்குவதாக, (அதாவது : அது என்னைவிட்டு நீங்க
நான் சுத்த ஜீவஸ்வரூப பாவனையாகிய தன்மையைக் கொள்வேனாக),
என்றான் - என்று சிம்மச்சந்திரவாசன் சொன்னான், எ-று. (57)
414. நெருப்பிடைக் கிடந்த செம்பிற் பட்டநீர்த் துள்ளி போலும்
விருப்பிடைக் கிடந்த வுள்ளத் தெழுந்தவே கத்தி னின்பந்
திருத்தியைச் செய்யு மென்று புலத்தினைச் செறிய நிற்றல்
நெருப்பைநெய் தெளித் தவிப்பா னெழுந்தவ னினைப்பி னொன்றே.
|