நெகிழ்ந்து (அதாவது தளர்ச்சியடைந்து), உடன்படாது -
(ஞானதியானஸ்வாத்தியாய முதலானவைகளைப் பழக)
வசப்படாது, (ஆகையினால்) மாதவன் - மஹாதவத்தைச் செய்யும் இச்சிம்மச்சந்திர
முனிவன், நாள்கள் - நாள்களில் (அதாவது தினந்தோறும்), நீதி -
ஆகமோத்த கிரமமாக, புகாவினை -
அன்னத்தை, சுருக்க -
கவளங்கவளமாகக் குறைத்துத் தின பக்ஷமாசாதி உபவாஸங்களில்
பழக்க, மெய்சரீரம், உடன்படும் - வசத்துக்கு வரும், பொறிகளும் -
ஸ்பரிசனாதி இந்திரிய விஷயங்களும்,
மிகா - அதிகமாகமாட்டா,
என - என்று, விரும்பி - விருப்பத்தையுடையனாகி, ஆவமோதுரியம்
- ஆவமோதுரியமென்னும் இரண்டாவது பாஹியதபஸை, மேவினான்
- பொருந்தினான், எ-று.
ஆகமோத்த கிரமவரிசை - யதியாசாரமென்னும் ஆகமத்தில்
சொல்லப்பட்ட வரிசை. (68)
425. இருத்தல்போதல் நிற்றல்மண் ணிடைக்கிடத்த லில்லுயிர்
வருத்தமெய்தி டாமை யோம்புங்
காயகுத்தி மாதவன்
திரப்பிதஞ்செல் தேசகால பாவமெல்லை
செய்துணும்
விருத்திசங்க மம்மெனும் விழுத்தவம்
பொருந்தினான்.
(இ-ள்.) (மேலும்) இருத்தல் - உட்கார்ந்திருப்பதிலும், போதல் -
நடந்து செல்வதிலும், நிற்றல்
- நிற்பதிலும், மண்ணிடை -
இப்பூமியின்மேல், கிடத்தலில் -
படுத்திருப்பதிலும், உயிர் - ஜீவன்கள், வருத்தம் - யாதொரு உபத்திரவத்தையும், எய்திடாமை -
அடையாதபடி, ஓம்பும் - (அவற்றை) இரக்ஷிக்கின்ற, காயகுத்தி - காய்குப்தியையுடைய,
மாதவன் - இம்முனிவன், திரப்பிதம்
-
திரவியம் (அதாவது வஸ்துக்கள்), செல்
- போகின்ற, தேசம் -
க்ஷேத்திரம் (அதாவது இடம்), காலம் - நேரம் (அதாவது நாழிகை),
பாவம் - பரிணாமம் (ஆகிய இவைகளை),
எல்லை செய்து - அளவுபடுத்தி, உண்ணும் - அந்தக்கிரமத்தின்படி பிக்ஷை பண்ணுகிற
(அதாவது ஆகாரம் ஏற்று உண்ணுகிற), விருத்தி சங்கமமெனும் -
விருத்திபரிசங்கியானமென்னும், விழு -
பரிசுத்தமாகிய, தவம் -
பாஹியதபஸையும், பொருந்தினான் - சேர்ந்தான், எ-று.
திரவியம், தேசம், காலம் முதலியவற்றை அளவுபடுத்தி ஆகாரம்
கொள்வதாவது :- இன்றைக்கு இத்தனை வஸ்துக்களுக்கு
மேல்
புசிப்பதில்லை யென்றும், பிட்சைக்காக இத்தனை
தெரு அல்லது
இத்தனை வீடுகளுக்கு மேல் போவதில்லையென்றும்,
இவ்வளவு
நாழிகைக்கு மேற்பட்டால் புசிப்பதில்லை யென்றும் பரிணாமத்தை அளவு படுத்தி ஆகாரங்கொள்வதாம். (69)
426. நவைக்கெலா மிடமிதென்று நாவதன் புலத்தினிற்
சுவைக்கன் மேவல் விட்டறத் துறந்துநின்றெவற்றினும்
|