உவத்தல்காய்த லின்றியொத்து நின்றசித்த
மெய்த்தவன்
சுவைப்பரித்தி யாகமாகு மாதவத்தொ டொன்றினான்.
(இ-ள்.) (பின்னரும்)
எவற்றினும் - எந்த விஷயங்களிலும்,
உவத்தல் - சந்தோஷித்தலும், காய்தல்
- வெறுத்தலும், இன்றி -
இல்லாமல், ஒத்துநின்ற - சமத்துவிபாவத்தோடு கூடி நின்ற, சித்தம்
- மனதையுடைய, மெய் - உண்மையாகிய, தவன் - தபஸையுடைய
சிம்மச்சந்திர முனிவரன், நவைக்கெலாம்
- துன்பத்திற்கெல்லாம்,
இடம் - ஸ்தானமானது, இதென்று - இதுவேயாகுமென்று நாவதன்
புலத்தினில் - ரஸனேந்திரிய விஷயத்தினால்,
சுவைக்கண் -
ரஸங்களின் மேல், மேவல் - மனம்
பொருந்துவதை, விட்டு -
விடுத்து, அறத்துறந்து - முழுதும் நீங்கி, நின்று - அந்நிலையில்
நின்று, சுவைப்பரித்தியாகமாகும்
- ரஸபரித்தியாக மென்று
சொல்லப்படும், மா - பெரிய, தவத்தொடு
- பாஹியதபத்துடன், ஒன்றினான் - பொருந்தினான், எ-று.
(70)
427. கவந்தமோரி கூகைபேய் நிவந்த காடு பாழக
முவந்தியானை வாளரி யுழுவைநின்
றுழல் வனங்
குவிந்தரவு வெம்புலி குமிறுமால் வரைமுழை
யுவந்திராச சீயமொன்று போலவே
றுறைந்தனன்.
(இ-ள்.)(அவ்வாறு பொருந்தி) கவந்தம் - தலையற்றவுடல்களும்,
ஓரி - குள்ளநரிகளும், கூகை - கோட்டான்களும்,
பேய் -
பைசாசங்களும், நிவந்த - மிகுதியாகிய,
காடு - சுடுகாட்டையும்,
பாழகம் - பாழ்மனைகளையும், உவந்து - சந்தோஷித்து, (அவற்றில்
தங்கியும்), யானை - யானைகளும், வாள் -
பிரகாசமான நிறம்
பொருந்திய, அரி - சிம்மங்களும், உழுவை - புலிகளும், நின்று -
நிலைபெற்று, உழல் - திரிகின்ற, வனம் - வனத்தையும், குவிந்து -
கூட்டமாகி, அரவு - சர்ப்பங்களும், வெம் - கொடுமையான, புலி -
புலிகளும், குமிறும் - சீறிமுழங்குகின்ற, மால் - பெரிய, வரை -
பருவதங்களிலுள்ள, முழை - குகைகளையும், உவந்து
- விரும்பி
அவற்றில் தங்கியும், இராசசீயம் -
அரசசிங்கம், ஒன்று போல -
ஒன்றைப்போல, வேறு - தனியாக,
உறைந்தனன் - அந்தச்
சிம்மச்சந்திர முனிவரன்
தங்கினான் ( அதாவது விவிக்த
சையாஸனமென்னும் தபஸைப் பொருந்தினான்), எ-று. (71) 428. வேனல்வெம்பு கான்மலை வெயின்னிலையின் மேவியும்
வானமாரி சோருநாண் மரம்முதன் மருவியும்
ஊனுருக்கும் வன்பனிக் கடற்புறத்து
வெள்ளிடைக்
கானயானை போலமூன்று காலயோகு
தாங்கினான்.
|