198மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)    (அதன்  மேலும்)  வேனல்  - வெய்யில், வெம்பும் -
மிகுதியாக  தகிக்கின்ற,  கால் -  காலமாகிய கிரீஷ்மத்  காலத்திலே
(அதாவது கோடைக்காலத்தில்), மலை - பர்வதத்தின் மேல், வெய்யில்
- வெய்யிலில்,நிலையின் - நிற்பதாகிய ஆதபயோகத்தில், மேவியும் -
பொருந்தியும்,  வானம் -  ஆகாயத்தினின்றும்,  மாரி - மழையானது,
சோருநாள்     -    பொழிகின்ற    வருஷாகாலத்தில்,   (அதாவது
மழைக்காலத்தில்),  மரம்முதல் - மரத்தினடியில், மருவியும் - சேர்ந்து
நின்றும், ஊன் - மாமிசத்தை, உருக்கும் - உருகச் செய்யும் (அதாவது
கரைக்கும்), வன் - கடுமையாகிய, பனி - பனிக்காலத்தில், கடற்புறத்து
- சமுத்திரத்தின்    பக்கத்திலுள்ள,   வெள்ளிடை   -    யாதொரு
மறைவுமில்லாத    வெளியிடத்தில்,    மருவியும்    -    சேர்ந்தும்,
கானயானைபோல்   -   காட்டில்   வசிக்கும்    யானையைப்போல,
மூன்றுகாலயோகு  -  திரிகால    யோகங்களையும்,   தாங்கினான் -
தரித்தான்,       (அதாவது     காயக்கிலேசமென்னும்    ஆறாவது
பாஹியதபஸையும்  பொருந்தினான்), எ-று.
    
          ?மருவியும்? என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (72)

 429. அரியவா யுலகெலாம் விலையிலா வருங்கலத்
     திரயமெய் யணிந்தவர் செய்கைசொன் மனங்களான்
     மரியமா சினைக்கெடுக்கு மத்திவார மாகிய
     பெரியவர் மனங்கொளப் பெருந்தவம் பொருந்தினான்.

(இ-ள்.)  (பின்னரும்) அரியவாய் - பெறுதற்கருமையானவைகளாகியும்,
உலகெலாம் -     இந்த     மூன்று     லோகமும்,  விலையிலா -
விலைப்பொருளாகக்       கொடுப்பதற்குப்   பொருந்தாதனவாகியும்
(இருக்கின்ற),அருங்கலத்திரயம் - அரிதாகிய ரத்தினத்திரயத்தை; மெய்
- மெய்யில்,      அணிந்தவர்     -    தரித்தவர்கள்,   செய்கை -
காரியத்திற்கேதுவாகிய     சரீரத்தாலும்,  சொல்     மனங்களால் -
வசனத்தாலும் மனதாலும் (அதாவது :  மனவசனகாயங்களால்), மரிய -
ஏதோசலன  வசத்தால்  சேர்ந்த,  மாசினை -  குற்றத்தை  (அல்லது
ஆஸ்ரவத்தை),  கெடுக்கும்  - போக்கும்படியான, அத்திவாரமாகிய -
அஸ்திவாரமாகிய,     (அதாவது      அடிப்படையாகிய   அல்லது
முதன்மையாகிய       பிராயச்சித்தமென்னும்),      பெரியவர்    -
தத்துவஞானிகளாகிய         பெரியோர்கள்,        மனங்கொள் -
மனதிற்கொள்கின்ற,      அப்பெருந்தவம்    -  அந்தப் பெரிதாகிய
அப்பியந்தர தபத்தை,    பொருந்தினான்  -     சேர்ந்தான், எ-று.

    காரியத்தால்  வந்த  குற்றம்  அதன்  காரணத்தை   யோசித்து
விடுத்தால் தீருமென்பது  இதனால் பெறப்பட்டது. இந்தப்பிராயச்சித்த
லக்ஷணம் பதார்த்த சாரத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (73)

 430. பெறற்கரிய காட்சிமெய் யுணர்ச்சிநல் லொழுக்கின்மே
     லிறப்பெய்தாமை மெய்ம்மொழி மனத்துழந் திறைஞ்சுதல்