பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 199


Meru Mandirapuranam
 

   சிறப்புடை யறத்தவர்க் கெதிரெழுச்சி யாதியித்
   திறத்தநால் விநயமும் சிறந்துமா தவஞ்செய்தான்.

   (இ-ள்.)   (அதன் மேல்) பெறற்கரிய  -  பெறுதற்கரிய, காட்சி -
சம்யக்     கரிசனமும்,       மெய்யுணர்ச்சி,      சம்யக்ஞானமும்,
நல்லொழுக்கின்மேல் -சம்யக் சாரித்ரமுமாகிய இந்த ரத்னத்ரயங்களின்
பேரில்,    இறப்பெய்தாமை   -  விடுதல்  இல்லாமையும்,  மெய்  -
சரீரத்தினாலும், மொழி  - வசனத்தினாலும், மனத்து - மனத்தினாலும்,
உழந்து  - பொருந்தி,இறைஞ்சுதல் - வணங்குதலாகிய தரிசன விநயம்
ஞானவிநயம்  சாரித்ரவிநயமும்,   சிறப்புடை -  மேன்மையையுடைய,
அறத்தவர்க்கு - அந்த  ரத்னத்ரயத்தில் வர்த்தியா  நின்றவர்களுக்கு,
எதிரெழுச்சி  -  எதிர்கொண்டு  வணங்குதலும், ஆதி  - முதலாகிய,
இத்திறத்த  -  இப்படிப்பட்ட, நால்விநயமும்  -  நான்கு  வகையான
விநயங்களும்,   சிறந்து  -  தன்னிடத்தே  சிறப்பாக  வளர,  மா  -
பெரிதாகிய,   தவம்   -   இந்த  விநயதபத்தையும்,   செய்தான்  -
இச்சிம்மச்சந்திர முனிவன் இயற்றினான், எ-று. (74)

 431. பெருத்த நோன்பு வன்பிணிகள் பீடைமூ விபோகமாந்
     திருத்தமேவி னார்கள் தியான நல்வதத்தொ டொன்றினார்
     விருத்தர் வாலர் மெல்லியா ரறத்தைமேவி நின்றவர்
     வருத்த நீக்கி யோம்புவையா வச்சமு மருவினான்.

    (இ-ள்.)    (அவ்வாறியற்றியதோடு)   பெருத்த  -  பெரிதாகிய,
(அதாவது சம்யக்துவ பூர்வமான), நோன்பு - நோன்பும், வன்பிணிகள்
- கொடுமையான  வியாதிகளும்,  பீடை  -  மற்றும்  துன்பங்களும்,
மூவியோகமாம் - திரிகால யோகங்கள் சேர்ந்த, திருத்தம் - திருந்திய
தபஸும், (ஆகிய இவற்றை),மேவினார் - அடைந்தவர்களும், தியானம்
- தர்மத்தியான சுக்கிலத்தியானமும், நல் - நன்மையாகிய, வதத்தோடு
- அணுவிரத   குணவிரத  சிக்ஷாவிரத  மஹாவிரதங்களும்   ஆகிய
இவற்றுடனே,   ஒன்றினார்   -   கூடிய  பேர்களும்,  விருத்தர்  -
விருத்தாப்பியர்களும், வாலர் - பாலவயதுடையவர்களும், மெல்லியார்
- சரீர சக்தியற்றவர்களும், (அல்லது ஸ்திரீ ஜாதியாரும்), அறத்தை -
சம்யக்துவத்தில்  கூடிய  தர்மத்தை,  மேவி   நின்றவர் - பொருந்தி
நின்றவர்களும்,  (ஆகிய  இவர்களுடைய),  வருத்தம் - ஏதோ கர்ம
வசத்தால் நேரிட்ட  உபசருக்கங்களை,  நீக்கி - தனது குணத்துக்கும்
அழிவுவராமல்  பரிகரித்து,  ஓம்பும்  -  இவர்களை   உபசரிக்கின்ற,
வையாவச்சமும் - வையா விருத்தியமென்னும் அப்யந்தா தபஸையும்,
மருவினான் - சிம்மச்சந்திர முனிவரன் சேர்ந்தான், எ-று. (75)

வேறு.

 432. யாக்கைக்க ணிச்சை நிற்கு மெழுத்தின்மேற் பழுத்த சொல்லை
     வாக்குநின்றுமிழு மச்சொல் வசத்ததாஞ் செவியு முள்ளம்