ரௌத்திரத்தியானம் :- ஹிம்ஸானந்தம், ம்ருஷானந்தம்,
ஸ்தேயானந்தம், சம்ரக்ஷணானந்தம் என்பனவாம்.
தர்மத்தியானம் :- அஜ்ஞாவிசயம், அபாய விசயம், விபாக
விசயம், சம்ஸ்தான விசயம் என்பனவாம்.
சுக்கிலத்தியானம் :- ப்ரதக்வ விதர்க்க வீசாரம், ஏகத்வ
விதர்க்க வீசாரம், சூக்ஷுமக்கிரியாபிரதிபாதி,வியுபாதக்கிரியா நிவிருத்தி
என்பனவாம்.
இவற்றின் விவரங்களை பதார்த்ததசாரத்தில் கண்டு கொள்க.
ஏகாதசவிதமான நிர்ஜரைகளின் விதங்களை, தத்துவார்த்த
சூத்திரவியாக்கியானமாகிய சர்வார்த்தசித்தி, சுகபோதை, ஸ்ருத
சாகரேயம் முதலானவைகளில் நிர்ஜராதிகாரமென்னும் ஒன்பதாவது
அதிகாரத்தில் பாத்துக்கொள்க. (77)
434. பொய்சித்த மகற்றி ஞான காட்சிநல் லொழுக்கம் பேணி
மிச்சத்தம் வேத னாதி யகத்தின்மேல் விருப்பை மாற்றி
வைத்துத்தன் காய தேச முதற்புறத் தன்பு மாற்றி
விச்சித்தி யின்றிச் சென்றான் வியுற்சர்க்க தவத்தி னோடே.
(இ-ள்.) (அவ்வாறாகி) பொய் .அசத்பூதோபசரிதானுபசரிதங்களை, சித்தம் -மனதினின்றும், அகற்றி - நீக்கி, ஞானகாட்சி நல்லொழுக்கம்
பேணி - சம்யக் ஞானதரிசன சாரித்ரங்களை
சத்பூதோபசரிதானுபசரிதத் தன்மையால் தெளிந்து ரக்ஷித்து, மிச்சத்தம்
- மித்தியாத்துவமும், வேதனாகி - வேதனாதியும் (அதாவது :
வேதத்திரயம், ஹாஸ்யாதிஷட்கம் குரோதாதி சதுஷ்கமும் ஆகிய),
அகத்தின்மேல் விருப்பை - இந்த அந்தரங்க பரிக்கிரகத்தின்மேல்
உளதாகும் ஆசையை, மாற்றி - நீக்கி (அதாவது : அந்தரங்க
பரிக்கிரக பரித்தியாகம் பண்ணி), வைத்து - ஸ்வாத் மத்தியானத்தில்
மனத்தை வைத்து, தன் காய தேசம்முதல் - தனது சரீரமிருக்கப்பட்ட
க்ஷேத்திரம் முதலாகவுள்ள, புறத்தன்பு - பாஹிய பரிக்கிரகத்தின்
ஆசையையும், மாற்றி - நீக்கி, ( இந்தச் சர்வசங்க
பரித்தியாகமென்னும்) வியுற்சர்க்கதவத்தினோடு - வியுத்சர்க்க தபஸில்,
விச்சித்தியின்றி - நழுவுதலில்லாமல், சென்றான் - பிரவேசித்தான்
(அதாவது சேர்ந்தான், எ-று.
வேதத்திரயம் :- ஸ்திரீவேதம்,
பும்ஸவேதம், நபும்ஸகவேதம் என்பனவாம்.
ஹாஸ்யாதிஷட்கம் :- ஹாஸ்யை, ரதி, அரதி, சோகம், பயம், சுகுப்சை என்பனவாம்.
குரோதாதி சதுஷ்கம் :- குரோதம், மானம், மாயை, லோபம் என்பனவாம்.
பாஹிய பரிக்கிரகம் பத்துவகைப்படும். அவையாவன : - க்ஷேத்திரம்,
வாஸ்து, இரண்ணியம், ஸ்வர்ணம், தனம், தான்யம், தாசி, தாசன்,
குப்பியம்,
|