பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 207


Meru Mandirapuranam
 

   வார்க்கடல் காமுலை யார் மகிட்சியிற்
   போர்க்கடா யானையான் புரிந்து செல்லுநாள்.

   (இ-ள்.)   (அவ்வாறு சூழ) பார்த்திபர் - அநேக தேயத்தரசர்கள்,
தரு - கொடுக்கின்ற, திரை - பகுதியை,  கொண்டு -  கைக்கொண்டு,
பைம்பொன்னால் - பசுமையாகிய பொற்காசுகளினால், இம்மண்ணினை
- இப்பூமியில்   மறைவாக   வைக்கும்படியான    பந்தோபஸ்துள்ள
நிலவறையாகிய தனது  பாண்டாகார  அறையை,  ஆர்த்தி - நிரப்பி,
அமிர்தச்  செப்பென   -    அமிர்தம்   நிறைந்த     செப்பென்று
சொல்லும்படியாக,   வார்க்கு   -     இரவிக்கைக்கு,  அடங்கா -
அடங்காதோங்கி     யிருக்கின்றனவாகிய,       முலையார்     -
ஸ்தனங்களையுடைய         ஸ்திரீமார்களினது,    மகிழ்ச்சியில் -
காமராகத்தினாலாகிய  சந்தோஷத்தில்,  புரிந்து  - விரும்பி, போர் -
யுத்தத்தைச் செய்யும், கடாயானையான் - ஆண்  யானையையுடைய
அவ்வரசன்,       செல்லுநாள்     -    அவ்வாறு       சென்று
கொண்டிருக்குங்காலத்தில், எ-று. (89)

 446. கண்மிசை யவனையான் கண்டு காவல
     விண்மிசை யின்பமும் வேந்தர் செல்வமும்
     புண்ணிய மிலாதவர்க் கில்லை பூமக
     ளெண்ணுவ துஞ்செயா ளென்றி யம்பினேன்.

    (இ-ள்.)  கண்மிசை -   எனது  கண்ணினால்,  யான்  - நான்,
அவனைக் கண்டு - அப்பூர்ணசந்திர குமாரனைப் பார்த்து, காவல -
அரசகுமாரனே!, விண்மிசை - தேவர் லோகத்தில் ஏற்படும், இன்பமும்
- சுகமும்,வேந்தர் செல்வமும் - பூமியிலுள்ள இராஜாக்களின் சம்பத்து
முதலானவைகளும், புண்ணியம் - பூர்வத்திற் செய்யப்பட்ட  புண்ணிய
கர்மம்,      இல்லாதவர்க்கு  -   இல்லாதவர்களுக்கு,   இல்லை  -
உண்டாவதில்லை   (அதுவல்லாமலும்),   பூமகள் -  லக்ஷ்மிதேவியும்
(அல்லது பூமிதேவியும்),  எண்ணுவதும்  -  அவர்களை நினைத்தலும்,
செய்யாள் -   செய்யமாட்டாள்,   என்று   இயம்பினேன் -  என்று
சொன்னேன், எ-று.

    மிசை -  ஏழனுருபு; இஃதுருபுமயக்கம்; மூன்றனுருபு ஏழனுருபாக
மயங்கி வந்தது. (90)

 447. உருவமு மழகுநல் லொளியுங் கீர்த்தியும்
     செருவிடை வெல்வலத் திறலுஞ் சிந்தைசெய்
     பொருளவை வருதலும் போக மும்நல்ல
     திருவுடை யறத்தது செய்கை யென்றனன்.

   (இ-ள்.) (அவ்வாறு  சொல்லிப் பின்னரும்) உருவமும் - ரூபமும்,
அழகும் - வனப்பும், நல் - நல்ல, ஒளியும் - பிரகாசமும்,  கீர்த்தியும்
- புகழ்ச்சியும்,