460. அருந்தவ னருளி னாலப் பத்திர மித்தி ரன்றான்
றிருந்திய குணத்து நின்பாற் சீயசந் திரனென் றானேன்
வருந்துநுண் ணிடையி னாளவ் வாருணி வந்துன் காதற்
பொருந்திய புதல்வ னாயப் பூரசந் திரனென் றானாள்.
(இ-ள்.) அருந்தவன் - அரிதாகிய தபசையுடைத்தாகிய
வரதர்மனென்னு முனிவரனது, அருளினால் - தயவினால்,
அப்பத்திரமித்திரன் தான் - அந்தப் பத்திரமித்திரனென்கிற
செட்டியான நானே, திருந்திய - திருத்தமாகிய, குணத்து -
குணத்தையுடைய, நின்பால் - உன்னிடத்தே, சீயசந்திரனென்று -
சிம்மச்சந்திரனென்று பெயர் கூறப்பட்டவனாய், ஆனேன் -
புத்திரனாகப் பிறந்தேன், வருந்து - வருந்துகின்ற, நுண் -
மெல்லிதாகிய, இடையாள் - இடையையுடையவளாகிய, அவ்வாருணி -
அந்த வாருணியென்னும் பிராம்மண புத்திரி, வந்து - வந்து, உன்
காதல் - உனதாசையால், பொருந்திய - பொருத்தமாகிய, புதல்வனாய்
- மற்றொரு புத்திரனாகி, அப்பூரசந்திரனென்று - அந்தப்
பூர்ணச்சந்திரனென்று பெயர் கூறப்பட்டு, ஆனாள் - பிறந்தாள்,
எ-று. (7)
வேறு.
461. ஆதலா லவன்க ணீங்காக்
காதலை யாயி னாய் நீ
போதுலா மலங்க லானுங்
கோதிலாக் குணத்த னாமே.
(இ-ள்.) ஆதலால் - ஆகையால், (அதாவது : அவனோடுனக்கு
முற்பவ ஸம்பந்தம் ஏற்பட்டிருந்ததாகையால்), நீ - நீ, அவன்கண் -
அக்குமாரனிடத்து, நீங்கா - நீங்காத, காதலையாயினாய் -
ஆசையையுடையவளானாய், போதுலாம் - புஷ்பங்கள் தங்கி
அசையாநின்ற, அலங்கலானும் - மாலையையணிந்த அக்குமாரனும்,
கோதிலா - குற்றமில்லாத, குணத்தன் ஆம் -
குணத்தையுடையவனாவான், எ-று. (8)
வேறு.
462. வினையெனுங் குயவ னம்மை வேண்டுரு வியற்றல் கண்டாய்
அனகனா முருவந் தன்னைப் பெண்ணுரு வாக்கி யங்கே
மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி
நினைவினான் முடித்து நின்றார் நீதியார் கடக்க வல்லார்.
(இ-ள்.)வினையெனும் - கர்மமென்று சொல்லப்பட்ட, குயவன் -
குசவன், நம்மை - ஆத்மராகிய நம்மை, வேண்டுருவு - இச்சித்த
உருவங்களாக, இயற் |