220மேருமந்தர புராணம்  


 

ஆம்     -    ஸ்வபாவதுக்கமாகும்,    சொன்ன   -    இப்போது
சொல்லப்பட்டிருக்கிற,   துன்பம்     -  துக்கங்கள், நாற்கதிக்கும் -
சதுர்க்கதிகளுக்கும்,  துருவமாய்  -    (அவ்வக்கதிக்குச் சொன்னபடி
நிச்சயமாகிய ஸ்வபாவிக)   துக்கங்களாக,  நின்ற - நின்றன, என்றும்
சொன்னேன், எ-று.                                       (19)

473. மனத்திடைப் பிறக்குந் துன்பம் வந்துறு மவற்றின் றுன்பம்
    தனுத்தனிற் பிறக்குந் துன்பந் தானியல் பாய துன்ப
    மெனச்சொலப் பட்ட நான்கு மியாவர்க்கு மாகு மின்ன
    நினைத்தறம் புணரி னின்ற தீக்கதி நீங்கு மென்றேன்.

     (இ-ள்.)  மனத்திடை  - (மனத்தையுடைத்தாகிய ஜீவன்களுக்கு)
மனதில்,  பிறக்கும் - உண்டாகும், துன்பம் - மனோதுக்கமும், வந்து -
மனதில் ஒன்று நினைக்க அதற்கு விபரீதமாய் வேறொன்று வர, உறும்
- அடைகின்ற,  அவற்றின் - அச்செயல்களினாலுண்டாகிய, துன்பம் -
ஆகந்துகதுக்கமும், தனுத்தனில் - சரீரத்தில்,பிறக்கும் - உண்டாகின்ற,
துன்பம்  - துக்கமாகிய   சரீர     துக்கமும், இயல்பாய - அந்தந்தக்
கதிகளுக்கு   ஸ்வபாவமாகிய,  துன்பம் - முற்கவியில் சொல்லப்பட்ட
ஸ்வபாவ      துக்கமும்,       என    -  என்று, சொல்லப்பட்ட -
சொல்லப்பட்டிருக்கிற,     நான்கும்   - இந்த மானஸ ஆகந்துக சரீர
ஸ்வாபாவிகமென்னும்    நாலுவிததுக்கமும்,   யாவர்க்கும் - ஸம்ஸார
ஜீவன்கள் யாவர்க்கும், ஆகும் - உண்டாகும், இன்ன - இப்படிப்பட்ட
துக்க   ஸ்வரூபமாகிய    ஸம்ஸார அஸாரத்தை, நினைத்து - மனதில்
சிந்தித்து,  அறம்   - ஸ்ரீ  ஜின தருமத்தை, புணரின் - சேரின், நின்ற
ஸம்ஸாரத்தில்   நிலை   பெற்றிருந்த,   தீக்கதி - துக்க ஹேதுவாகிய
இக்கதிகள்,   நீங்கும்  -  நீங்கி ஆத்மசுகம் உண்டாகும், என்றேன் -
என்றும் சொன்னேன், எ-று.

     தான் - அசை.                                     (20)

474. விநயத்தோ டிறைஞ்சிக் கேட்கும் முனியைப்போல்
                                         விளம்பிற்றெல்லாம்
     மனம்வைத்து வணங்கிக் கேட்டு வதங்கள்பன் னிரண்டு மேவிப்
     பனையொத்த தடக்கை மாநல் லுயிர்களைப் பாது காக்கும்
     முனியொத்துக் கருணை வைத்தெவ் வுயிரையு மோம் பிற்றன்றே.

     (இ-ள்.)   (இவ்வாறு   சொல்லிய    பின்பு)   பனையொத்த -
பனைபோல்    திரட்சி    பொருந்திய,   தடக்கைமா     -  பெரிய
துதிக்கையையுடைய     அந்த     யானையானது,   விநயத்தோடு -
வணக்கத்துடன்,    இறைஞ்சி     - தாழ்ந்து, கேட்கும் - கேட்கின்ற,
முனியைப்போல்     -   ஒரு முனிவரன்போல, விளம்பிற்றெல்லாம் -
என்னாற்    சொல்லப்பட்டவைகளை    யெல்லாம், மனம் வைத்து -
மனத்தை    நிலையாக   வைத்து, வணங்கி - நமஸ்கரித்து, கேட்டு -
கேட்டுக்கொண்டு, வதங்கள் பன்னிரண்டும் - த்வாதச விரதங்களையும்,
மேவி   -   பொருந்தி, நல் - நல்ல, உயிர்களை - ஸ்தாவரஜங்கமாதி
சகலப்    பிராணிகளையும்,    பாதுகாக்கும்    - ரக்ஷிக்கும்படியான,
முனியொத்து - ஒரு