நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 221


 

முனிவன்  போன்று,  கருணை  வைத்து  - தயவை மனதிலே தாங்கி,
எவ்வுயிரையும்   ஸகல    ஜீவன்களையும்,  ஓம்பிற்று - இரக்ஷித்தது,
எ-று.                                                  (21)

475. பொய்கொலை களவு காமம் புலைசுதேன் கள்ள கற்றி
    மெய்யுறத் திசையி னோடு பொருளினை வரைந்து மேனி
    நையினும் வதங்க ணையா வகையினா னாக ராசன்
    சய்யமா சய்ய மத்திற் றலைநின்றார் போலச் சென்றான்.

     (இ-ள்.)   (மேலும்)   பொய்   -   அசத்தியமும்,  கொலை -
ஹிம்சையும்,  களவு   -   ஸ்தேயமும், காமம் - ஆசையும், புலைசு -
மாமிசம்  பொசித்தலும்,  தேன் - மதுபானம் பண்ணுதலும், கள் - கள்
குடித்தலும்,  (ஆகிய  இவ்வேழு   துச்சாரித்திரங்களையும்) அகற்றி -
நீக்கி,   மெய்யுற   -   சத்தியம்   பொருந்த, (அதாவது : ஸத்தியம்,
அஹிம்சை,  அஸ்தேயம், விராகம் இவைகள் வந்து கூடி மது மத்திய
மாம்ஸ  நிவிருத்தியாக),   திசையினோடும்  -     திக்விரதத்தோடும்,
பொருளினை  - பரிக்கிரக வஸ்துக்களை, வரைந்து - மட்டுப் பண்ணி,
மேனி - சரீரமானது, நையினும் - நைந்தாலும், வதங்கள் - விரதங்கள்,
நையாவகையினால்   -   குறையாத    விதத்தினாலே, 1நாகராசன் -
இவ்வியானை    யரசன்,      சய்யமாசய்யமத்தில்     -     தேச
சம்யதகுணஸ்தானத்தில்,  தலைநின்றார் போல - முதன்மையாக நின்ற
விரதீகர்   என்னும்   இரண்டாநிலை ஸ்ரீராவகர் போல, சென்றான் -
இவற்றின் வழியிற் பிரவேசித்தவனாய் ஒழுகினான், எ-று.       (22)

476. உவர்ப்பொடு வெறுப்பி னொன்றி யுடம்பொடு புலங்க டம்மேற்
     றுவர்ப்பசை நான்கு நீங்கிச் சொன்னபன் னிரண்டு முன்னிச்
     சர்ச்செய்கை யின்றிச் சித்தஞ் சாந்தியி னன்மைதீமைக்
     குவத்தல்காய் வின்றிப் பக்சந் திங்கணோன் பொன்றிச் சென்றான்.

     (இ-ள்.)   (மேலும்   அவன்) உடம்பொடு புலங்கள் தம்மேல் -
இந்தச்     சரீரத்தோடு   பஞ்சேந்திரிய    விஷயங்களின்   மேலும்,
உவர்ப்பொடு    -  அருவருப்புடன்   (அதாவது :    சரீரத்தின்மேல்
அசுசிபாவத்துடன்),   வெறுப்பினொன்றி   -  இந்திரிய விஷயங்களில்
ஏற்படும்   வைராக்கியத்திலும் பொருந்தி, துவர்ப்பசை நான்கு நீங்கி -
குரோத  மான   மாயா   லோபமென்னும் சதுஷ்கஷாயங்களினின்றும்
விலகி,   சொன்ன   - ஆகமத்திற் சொன்ன, பன்னிரண்டும் உன்னி -
துவாதசானுப்   பிரேட்சைகளை  பாவித்து,  சவர்ச்செய்கை  - கெட்ட
நடத்தைகள்,   இன்றி   - இல்லாமல், சித்தம் - மனதில், சாந்தியின் -
உபசாந்த   பரிணாமத்தினோடு, நன்மை தீமைக்கு -சுகதுக்கங்களுக்கு,
உவத்தல்காய் வின்றி - ஹர்ஷவிஷாதமின்றி, பக்

___________________________________________________________

1யானையை  உயர்திணையாகக்   கூறியது   சிறப்பினால் வந்த பால்
வழுவமைதியெனப்படும்.