நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 223


 

    மிக்கெழுந் தனலுங் கோபத் தோடிமே லேறி நெற்றி
    சிக்கெனக் கதுவத் தீரன் காயமுந் தியாகஞ் செய்தான்.

     (இ-ள்.)  அக்கணத்து   -  அப்படி   யானையரசன்  சேற்றில்
கால்புதைந்து  நின்ற  அக்காலத்தில், அமைச்சன் - முன் ஸிம்மஸேன
பவத்தில்   அந்த யானையரசனுக்கு மந்திரியாயிருந்த ஸத்தியகோஷன்,
நாகம் - (பின் அடைந்த) அகந்தன ஸர்ப்ப ஜன்மம், (நீங்கி), சமரமாய்
- பிறகு   சமரீமிருகமாகி,   அதனைவிட்டு   -  அதையும் ஆயுராவ
ஸானத்தால்  நீத்து,   குக்குட  வடிவிற் பாம்பாய் - வடிவினையுடைய
கோழிப்பாம்பாய்,பிறந்த - பிறந்திருந்த, அக்குபதன் - அந்தத் தாழ்ந்த
பதவியடைந்த  அப்பாம்பு,   காணா - இவ்வியானை யரசனைக்கண்டு,
மிக்கெழுந்து  -   மிகுதியாக   உண்டாகி, அனலும் - அக்கினிபோல
வெம்புகின்ற,  கோபத்து  -  குரோதத்தினால், ஓடி - பறந்து சென்று,
நெற்றிமேலேறி    -    யானையின்   மஸ்தகத்தில்  ஏறி, சிக்கென -
சீக்கிரமாக, கதுவ - கடிக்க, தீரன் - தீரனாகிய அவ்வியானை யரசன்,
காயமும்   -   தனது  சரீரத்தையும், தியாகஞ்செய்தான் - (இச்சரீரம்
நம்மாத்ம  ஸ்வரூபமல்லவென்று மனதினால் விஷாதமின்றி) விட்டான்,
எ-று.                                                  (26)

480. மலையினைச் சூழ்ந்த மஞ்சி னஞ்சுவந் தெங்குஞ் சூழ
    நிலையினிற் றளர்த லின்றி நின்றுமா தவன்றன் பாதந்
    தலைமிசைக் கொண்டு பஞ்ச மந்திரஞ் சிந்தை செய்து
    நிலையிலா வுடம்பு நீங்கி நெறியிற்சா சாரம் புக்கான்.

     (இ-ள்.)  (அவ்வாறு) மலையினை - ஒரு பர்வதத்தை, சூழ்ந்த -
சூழ்ந்து  கொண்ட,   மஞ்சின்   -    மேகத்தைப்   போல, நஞ்சு -
(அப்பாம்பின்)   விஷமானது,    வந்து எங்குஞ்சூழ - சரீர முழுதிலும்
சேர்ந்து  பரவிச்சூழ,  நிலையினில் - மனோநிலையில், தளர்தலின்றி -
நழுவாமல், நின்று - ஆத்ம பாவனையில் நின்று, மாதவன் துன் பாதம்
- தனக்குக் குருவாகிய ஸிம்மச் சந்திர முனிவனாகிய என் பாதங்களை,
தலை மிசைக் கொண்டு - சிரஸிற்றரித்து பாவனையால் வணங்கி, பஞ்ச
மந்திரம்  -  பஞ்சநமஸ்கார பரமபதங்களை, சிந்தை செய்து - மனதில்
தியானித்து,    நிலையிலா   -   அனித்திய ஸ்வரூபமாகிய, உடம்பு -
யானைச்     சரீரம்,      நீங்கி     -     விலகி,      நெறியில் -
சுபோபயோகபாவனாவழியால்,   சாசாரம் - ஸஹஸ்ராரகல்பமென்னும்
தேவருலகத்தை, புக்கான் - அடைந்தான், எ-று.               (27)

481. ஆயுவுங் கதியு மானு புவ்வியு மக்க திக்கே
    ஏயநல் வினைக ளெல்லா மெழுந்தவற் றோடுஞ் சென்று
    பாயநல் லமளி மேலோர் பார்த்திப னணிந்து வந்து
    மேயினா னெழுந்த தேபோல் வினையினான் முடித்தெ ழுந்தான்.

     (இ-ள்.) (அவ்வாறடைந்தவன்) ஆயுவும் - ஆயுஷ்யமும், கதியும்
- கதிநாம  கர்மமும், ஆனுபுவ்வியும் - அனுபூர்விநாமமும், அக்கதிக்கு
- அத்தேவகதிக்கு,