நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 225


 

கடகமும்  -  அஸ்தகங்கணமும், கழலும் - வீரகண்டயமும், பட்டும் -
பட்டு   வஸ்திரங்களும்,    கலாபமும்     -     (இடையணியாகிய)
மேகலாபரணமும்,   வீழுநூலும்   - மார்பில் தொங்குகின்ற பூணூலும்,
உடன்   -   தன்னுடனேயே, இயல்பாகி - இயற்கையாக,  தோன்றி -
உண்டாகி,  ஒளியுமிழ்ந்து - பிரகாசத்தை வீசி, இலங்கும் - விளங்கும்,
மேனி  - சரீரம், படரொளி - மிகுதியாகப்படர்ந்த ஜோதியை, பரப்ப -
பரவுதல் செய்ய, மஞ்சில் - படுக்கை மெத்தையின்பேரில், பருதியின் -
சூர்யன்போல, இருந்தபோழ்தில் - இருந்த காலத்தில், எ-று.      (30)

484. காரென மலர்கள் மாரிக் கற்பக மரங்கள் வீழ்த்த
    வாரணி முரச மெங்கும் முழங்கநந் தனவ னத்தில்
    வேரியுந் தாது மேந்தி மந்தமா ருதங்கள் வீசச்
    சீரணி கொங்கை யாருந் தேவருஞ் சென்று சேர்ந்தார்.

     (இ-ள்.)   (அவ்வாறு  அத்தேவன்   பிறந்து     மெத்தையில்
எழுந்துட்கார்ந்த   காலத்தில்)    காரென  -   மழையைப் பொழியும்
மேகத்தைப்போல,   கற்பக    மரங்கள்    - அவ்விடத்தி லிருக்கும்
கற்பகவிருட்சங்களானவை,   மலர்கள்  -    புஷ்பங்களாகிற, மாரி -
மழையை, வீழ்த்த - சொரிய, எங்கும் - அத்தேவலோகமெங்கும், வார்
- இறுக்கிக்கட்டப்பட்ட  வாரையுடைய,  அணி  - அழகிய, முரசம் -
பேரிகைகள்,    முழங்க    -     சப்திக்க,      நந்தனவனத்தில் -
புஷ்பவனத்தினின்றும்,   வேரியும்   -   வாசனைகளையும், தாதும் -
பூந்தாதுக்களையும்,    ஏந்தி    -    தரித்து,    மந்தமாருதங்கள் -
இளங்காற்றுக்கள்,   வீச  - எப்பக்கமும் உலாவ, சீரணி - சிறப்போடு
கூடிய         ஆபரணாதிகளையணிந்த,        கொங்கையாரும் -
ஸ்தனங்களையுடைய    தேவமாதர்களும்,     தேவரும் - ஸாமான்ய
தேவர்களும், சென்று - இந்த ஸ்ரீதர தேவனிடத்தில் போய், சேர்ந்தார்
- அடைந்தார்கள், எ-று.                                  (31)

485. எத்திக்கும் பார்த்தி தென்னோ யாவரோ யான்பி னாரோ
    சித்தத்துக் கினிய தேசம் யாரதோ வென்றி ருந்து
    தத்துறும் போழ்தி லந்தப் பவத்தைச்சார்ந் தெழுந்த வோதி
    கைத்தலப் படிகம் போலக் கண்டது கருதிற் றெல்லாம்.

     (இ-ள்.) எத்திக்கும்  - (அப்போது ஸ்ரீதரதேவன்) நாற்றிசையும்,
பார்த்து - நோக்கி, இது - இங்குத்தோற்றுவது, என்னோ - என்னவோ,
யாவரோ- (இவ்விடத்திலிருக்கப்பட்டவர்களெல்லாம்) எவர்களோ, பின்
- பிறகு, யான் - நான், ஆரோ - எவனோ, சித்தத்துக்கு - மனத்துக்கு,
இனிய  - இனிமையாகிய,   தேசம்   - இந்த க்ஷேத்திரம், யாரதோ -
யாருடையதோ,   என்று   -    என்று    நினைத்து, இரந்து - தான்
அவ்விடத்திலேயே   யிருந்து,   தத்துறும் போழ்தில் - மனந்ததும்பிப்
பிரமிக்கின்ற   காலத்தில்,   அந்தப் பவத்தைச் சார்ந்து - அத்தேவப்
பிறப்பை