நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 227


 

வேறு.

488. வென்றி யுந்திரு வும்பர மாயுவு
    மொன்றி வையக முள்ளள வுஞ்செல்க
    என்று சொல்லி யிறைஞ்சிய வானவர்
    நின்று பின்செயு நீதிக ளோதினார்.

     (இ-ள்.) வென்றியும் - வெற்றியும்,  திருவும் - தேவஸம்பத்தும்,
பரமாயுவும்    -    உத்கிருஷ்டாயுஷ்யமும்,   ஒன்றி  -  பொருந்தி,
வையகமுள்ளளவும்   -  இந்த லோகமுள்ளவரையில், செல்க - இந்த
ஸ்ரீதர  தேவனுக்கு நடப்பதாக, என்று சொல்லி - என்று ஸ்துதிகளைச்
சொல்லி, இறைஞ்சிய - வணங்கிய, வானவர் - அத்தேவர்கள், நின்று -
ஸ்ரீதர   தேவனெதிரில் நின்று, பின் - பிறகு, செயும் - அத்தேவனால்
செய்யும்படியான, நீதிகள் - வரிசைக்கிரமங்களை, ஓதினார் - சொல்லத்
தொடங்கினார்கள், எ-று.                                  (35)

489. மஞ்ச னஞ்சமைத் தார்மதி போன்முகத்
    தஞ்சொ லாரது முன்ன மமர்ந்துநீ
    பஞ்ச காயம் பணித்த பிரானடிக்
    கஞ்ச லிசெய் தமர்ந்த சிறப்புனி.

     (இ-ள்.)  (அவ்வாறு   தொடங்கி    அத்தேவனை   நோக்கி,
ஸ்ரீதரதேவனே!)    நீ - நீ,     மஞ்சனஞ்சமைத்து    -    முதலில்
திருமஞ்சனத்தை  ஏற்படுத்திக்கொண்டு, (அதாவது : திருமஞ்சன நீரில்
ஸ்நானம் பண்ணிப் பிறகு), ஆர்மதிபோல் - (ஒளி நிறைந்த) சம்பூர்ணச்
சந்திரன்போன்ற,   முகத்து   -    முகத்தையுடைய, அம் - அழகிய,
சொலாரது  -  வசனத்தையுடைய தேவிமார்களினது, முன்னமமர்ந்து -
எதிரில்  இருந்து   அவர்களுக்குக்   காட்சி  கொடுத்து, (அதன்பின்),
பஞ்சகாயம்   -   பஞ்சாஸ்தி   காயங்களை,   பணித்த  -  பவ்விய
ஜீவர்களுக்குபதேசித்த,   பிரான்   -   ஸர்வஜ்ஞனுடைய, அடிக்கு -
பாதங்களுக்கு, அஞ்சலிசெய்து - வணக்கஞ்செய்து, அமர்ந்த சிறப்பு -
பொருந்திய   பூஜாஸ்துதி   முதலாகிய   மஹிமைகளை,   உன்னி -
நினைத்துச் செய்து, எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                   (36)

490. தாவி லாத்தவத் தின்பய னாகிய
    தேவர் தந்தொகை செய்வ தறிந்துபின்
    னாவி னோசை நரம்பி னெழுகுரற்
    றாவி லாவி லயம்பயில் சாலைகாண்.