நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 229


 

493. அரணடைந்த வெங்கானத் தானையாய் நின்றுன்
     சரணடைந்தே னின்றிந்தச் சாசார னானாற்
     கரணமெலாம் வென்றுன்னைக் கண்டவர்கள் காம
     மரணமிலா வீடெய்தன் மற்றோர் பொருளோ.

     (இ-ள்.)(அவ்வாறு வணங்கிப் பின்னரும் அக்கடவுளை நோக்கி)
அரணடைந்த   -    அரசன்   நாட்டிற்குக்   காவலாகச்   சேர்ந்த,
வெங்கானத்து    -  வெப்பம்   பொருந்திய   (காட்டு மிருகங்களும்
வனசரர்களும்    வசிக்கின்ற) சல்லகியென்கிற வனத்தில், ஆனையாய்
நின்று  - நான்   ஆனையாகப்   பிறந்து  நிலைபெற்றிருந்து,   உன்
சரணடைந்தேன்  - (ஜினேஸ்வரனே! உனது குணத்தைச் சிம்மச்சந்திர
முனிவரனாகிய  குரு   சொல்லக்கேட்டுத் தெரிந்து, உனது பாதத்தை
எனக்கு)   ரக்ஷணையாக  வடைந்தேன், (அங்ஙனம் அடைந்ததனால்
நான்)   இன்று    -    இப்பொழுது,    இந்தச்   சாசாரனானால் -
இச்சகஸ்ராரகல்பத்தில் தேவனாகப் பிறந்தால், கரணமெலாம் வென்று -
மனோ    வாக்கு    காயமாகிய    திரிகரணங்களையும்   ஜெயித்து
குப்தம்பண்ணி  ஆத்மபாவனையில்   பரிசுத்தராகிக்  கர்மமலங்களை
யகற்றி,   உன்னைக்   கண்டவர்கள்   -  உன்னை  திரவிய   குண
பரியாயங்களால்   நிச்சயமாக     வறிந்து    அதனால்  ஸ்வானுபூதி
பெற்றவர்கள்,   காமம்  - காமராகமும், மரணம் - மரணமும், இலா -
இல்லாத, வீடெய்தல் - மோக்ஷமடைதல், ஓர் பொருளோ - ஒரு அரிய
பொருளாகுமோ? (அது அவர்களால் எளிதில் அடையக் கூடியதாகும்),
எ-று.

     ஆகுமோ - எதிர்மறை யெச்சம். மற்று - அசை.          (40)

494. நிழற்போல நின்றுன்னை வந்தடைந்தார் மாற்றா
    மழற்போக்கி யந்தமிலா வின்பத்தை யாக்கி
    வழுத்தரா முத்தியின்கண் வைக்குநின்பொற் பாத
    நிழற்சேரார் மாற்றா நெடுவழியைச் செல்வார்.

     (இ-ள்.) உன்னை வந்து அடைந்து - உன்னிடம் வந்து சேர்ந்து,
நிழல்  போல நின்றார் - உன்னுடைய நிழலைப்போல நீங்காது நின்று
நின்தாளை  வணங்குகின்றவர்களுடைய,   மாற்றாம்  - ஸம்சாரமாகிற,
அழல் - ஆதபத்தை,   போக்கி  - நீக்கி, அந்தமிலா - முடிவில்லாத,
இன்பத்தையாக்கி   -  ஸௌக்கியத்தை உண்டு பண்ணி, வழுத்தரா -
நீங்குதலில்லாத,   முத்தியின்கண்   -    மோட்சத்தில்,  வைக்கும் -
சேர்க்கின்ற, நின்  - உனது, பொற்பாத நிழல் - அழகிய பாத நிழலை,
சேரார் -  அடையாதவர்கள், மாற்றாம் - ஸம்ஸாரமாகிய, நெடுவழியை
- நீண்ட வழியில், சேர்வார் - அடைவார்கள், எ-று.