வைசயந்தன் முத்திச்சருக்கம் 23


 

வேறு.

 49. சுண்ண மெண்ணெய்ச் சொரிந்தனர் தூரியம்
    விண்ணை விம்மி முழங்கின வெண்கொடி
    யண்ண றோன்றலு மெங்கணு மாடின
    புண்ணி யன்னகர் பொன்னக ராயதே.

     (இ-ள்)   சுண்ணம்   -  கந்தப்பொடிகளையும்,   எண்ணெய் -
சம்பங்கி  எண்ணெய்  முதலானவைகளையும், சொரிந்தனர்  -  இராஜ
குடும்பத்தார் வழங்கினார்கள்,  தூரியம் - (அஷ்டாதச)  வாத்தியங்கள்,
விண்ணை   -   தேவலோகத்தில்  சார்ந்து,   விம்மி  - அதிகரித்து,
முழங்கின - சப்தித்தன, வெண்கொடி - வெள்ளைத் துவசங்களானவை,
அண்ணல்  -  சிரேஷ்டனாகிய  புத்திரன்,  தோன்றலும் - பிறத்தலும்,
எங்கணும் - எவ்விடங்களிலும்,  ஆடின - அசைந்தன, புண்ணியன் -
புண்ணியவந்தனாகிய    (இவ்வரசனது),   நகர்   -   பட்டணமானது,
பொன்னகராயது - தேவலோகத்துக்குச் சமானமாயிற்று, எ-று.     (49)

 50. சஞ்ச யந்த னெனும்பெய ரானவ
    னஞ்சு தாயர்தங் கைவழி யந்திவாய்
    மஞ்சி லாமதி போல வளர்ந்தபி
    னஞ்சி லோதியர்க் கின்னமிர் தாயினான்.

     (இ-ள்)  சஞ்சயந்தனெனும்  -  சஞ்சயந்தனென்கிற, பெயரான் -
பெயரினாலே,   அவன் - அப்புத்திரன்,   அஞ்சுதாயர்தம் - ஐவகைத்
தாய்மார்களுடைய,    கைவழி    -    கைவசத்தில்,   அந்திவாய் -
சந்தியாகாலத்தில் உண்டாகிய,  மஞ்சிலா - களங்கமில்லாத, மதிபோல,
மூன்றாம்பிறைச்  சந்திரன்போல்,  வளர்ந்த  -  கிரமத்தால்  வளர்ந்த,
பின்  -  பிற்பாடு, 1அஞ்சிலோதியர்க்கு - ஐந்துவகைப்  பாகுபாட்டில்
அமைந்த  கூந்தலையுடைய  ஸ்த்ரீமார்களுக்கு, இன் - இனிமையாகிய,
அமிர்தாயினான்  -  அமிர்தத்துக்குச்  சமானமானான் (யெனவனத்தை
யடைந்தான் என்றபடி), எ-று.                               (50)

வேறு.

 51. குஞ்சிக ணிழன்மணிக் கதிர்க்கு ழாமுக
    மஞ்சிலா மதிபுய மணியெ ழுக்கண்மார்

___________________________________________

     1 சில்   -   தகட்டணி    யென்னப்படும்;   இது   கூந்தலின்
உச்சியிலிடப்படும்    ஒரு    வகை    ஆபரணம்;    இக்காலத்தில்
சடைபில்லையென  வழங்குவது.  ஆதலின்,  ‘அஞ்சிலோதி" என்பதை
"அம் - சில் - ஓதி"  எனப்பிரித்து   ‘அழகிய  தகட்டணியையணிந்த
கூந்தல்"  எனப் பொருள் கொள்ளலும் பண்டைய உரையாசிரியர்களிற்
பெரும்பாலார் வழக்கு.