497. ஒன்றின் மேல்வைத்த முப்பதேழ் நான்கிரண்
டொன்றின் மேலொன்று மூன்றுமூன் றொன்பது
ஒன்று மேலொன்று மாந்துறக் கப்புரை
நின்ற மேலுற கீழ்நின்ற நீதியால்.
(இ-ள்.) துறக்கப்புரை -ஸ்வர்க்கலோக படலங்கள்,ஒன்றின்மேல்
வைத்த முப்பது - (ஸௌதர்ம ஈசான கற்பத்தில்) ஒன்றுக்கு
முன்னாகவைத்த முப்பதும், (அதாவது : முப்பத்தொரு படலங்களும்),
ஏழ் - (ஸநத்குமார மாஹேந்திர கல்பத்தில்) ஏழுபடலமும், நான்கு -
(பிரம்ம, பிரம்மோத்திர கல்பங்களில்) நான்கு படலங்களும், இரண்டு -
(லாந்தவ, காபிஷ்ட, கல்பங்களில்) இரண்டு படலங்களும், ஒன்று -
(சுக்ர, மகாசுக்கிர கல்பங்களில்) ஒரு படலமும், மேலொன்று -
(சதாரசஹஸ்ரார கற்பங்களில்) ஒரு படலமும், மூன்று -
(ஆனதபிராணத கற்பங்களில்) மூன்று படலங்களும், மூன்று - ஆரண
அச்சுத கல்பத்தில்) மூன்று படலங்களும், ஒன்பது -
(நவக்கிரைவேயகத்தில்) ஒன்பது படலங்களும், ஒன்று -
(நவாணுதிசையில்) ஒரு படலமும், மேலொன்று - (பஞ்சாணுத்தரத்தில்)
ஒரு படலமும், கீழ்நின்ற - இந்தப் பிரகாரம் கீழ்நின்றவைகளாகிய
சௌதர்ம ஈசான கல்பங்களினின்றும், மேலுற - மேலே பொருந்த,
(அதாவது : ஸர்வார்த்தசித்தி பரியந்தம்), நீதியால் - இப்போது
சொன்ன வரிசைக் கணக்காக, நின்ற - ஒன்றின்மேலொன்றாக
இருக்கப்பட்டனவாய், ஆம் - ஆகும், எ-று. (44)
498. இரண்டு மேழுமீ ரைந்துமீ ரேழுமா
யிரண்டு மேற்சென்றி ருபத்தி ரண்டெய்த
திரண்ட வற்றின்மே லொன்றுசென் றாயுக
முரண்டெ ழுங்கடன் முப்பத்து மூன்றுமே.
(இ-ள்.) முரண்டு - சப்தித்து, எழும் - எழுகின்ற, கடல் -
கடல்களானவை, இரண்டு - ஸௌதர்ம ஈசான கல்பத்திலிராநின்ற
தேவர்களுக்கு இரண்டும், ஏழு - ஸநத்குமார மாஹேந்திர
கற்பத்திலிராநின்ற தேவர்களுக்கு ஏழும், ஈரைந்து - பிரம்ம
பிரம்மோத்தர கல்பத்திலிராநின்ற தேவர்களுக்குப் பத்தும், ஈரேழுமாய்
- லாந்தவகாபிஷ்ட கல்பத்திலிராநின்ற தேவர்களுக்குப் பதினாலுமாய்,
இரண்டு மேற் சென்று - அதன்மேல் ஒவ்வொரு யுகளங்களுக்கும்
இரண்டிரண்டு அதிகமாகச் சென்று (அதாவது : சுக்ரமஹா சுக்ர
கல்பத்துத்தேவர்களுக்குப் பதினாறு கடலும், சதாரஸஹஸ்ரார
கல்பத்திலிராநின்ற தேவர்களுக்குப் பதினெட்டுக் கடலும், ஆனதப்
பிராணத கல்பத்தாருக்கு இருபது கடலும் ஆய் அதன்மேல்),
இருபத்திரண்டு - ஆரண அச்சுத கல்பத்திலிராநின்ற தேவர்களுக்கு
இருபத்திரண்டு கடலும், திரண்ட - சேர்க்கப்பட்ட, அவற்றின்மேல் -
அந்த |