கழுமல் - (மோகித்து ஹேயோபாதேய விஞ்ஞானமின்றிப்)
பொருந்துதலும், மலையனைய - பர்வதம்போன்ற (அதாவது :
மலையைப்போல் அதிகரித்த), செல்வம் - ஐசுவரியப்பற்றுதலும், மாயம்
- மாய்கை பொருந்திய, நரகத்து - நரகத்திலே, வீழ்க்கும் -
(அப்பற்றுதலுடையவர்களை) விழப்பண்ணி நாரகராக்கிவிடும்,
மலைவிலா - மாறுபாடில்லாத யதோக்தமாகிய, நெறியை -
ஸன்மார்க்கத்தை (அதாவது : தத்துவார்த்த சிரத்தான ஞானாதிகளை),
விட்டு - விலகி, மயங்கினார் நெறியை - மயக்கமடைந்தவர்களுடைய
வழியை, (அதாவது : அயதாக்கிரஹணார்த்தமாகிய மித்தியாத்வ
நெறியை), பற்றின் - அஞ்ஞானோ தயத்தால் சேர்ந்தால், நிலையிலா -
அனித்தியஸ்வரூபமாகிய, மாற்றில் - ஸம்ஸாரத்தில், நின்று - தீர்க்க
காலம் நின்று, சுழறற்கு - ஜனன மரணாதி துக்கங்களையடைந்து
சுழல்வதற்கு, நிமித்தம் - காரணமாகும், என்றான் - என்று
அப்பூர்ணச்சந்திரவரசன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்,
எ-று. (81)
535. அஞ்சினான் மாற்றைச் சால வடங்கினான் புலங்க டம்மை
நஞ்சையே போலு மென்று நடுங்கினான் றொடங்கல் செய்யான்
வஞ்சமும் படிறும் பற்றுஞ் செற்றமுங் களிப்பு மாற்றிப்
பஞ்சணு வதங்க ளோடு சீலங்கள் பயின்று சென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி) மாற்றை - இந்த ஸம்ஸார
ஸ்வரூபத்தை, (அனித்தியமென்றும் துக்ககாரணமென்றும்), அஞ்சினான்
- பயந்தவனாகியும், புலங்கடம்மை - பஞ்சேந்திரிய விஷயங்களை,
(இவை) சால - மிகவும், நஞ்சையே போலுமென்று - விஷத்துக்குச்
சமானமாகுமென்று, நடுங்கினான் - அவற்றிற்குப் பயந்தவனாகியும்,
தொடங்கல் செய்யான் - (அவ்விஷயாரம்பக் கிரியைகளை) ஆரம்பம்
செய்யானாகியும் (அதாவது : அனாரம்ப விஷயனாகி), அடங்கினான் -
விஷய ஸம்யமனாகியும், வஞ்சமும் - கபடமும், படிறும் - பொய்யும்,
பற்றும் - ஆசையும், செற்றமும் - த்வேஷமும், களிப்பும் -
சந்தோஷமு மாதியாகியவைகளை, மாற்றி - நீக்கி,
பஞ்சணுவதங்களோடு - பஞ்சாணு விரதங்களோடும், சீலங்கள் - சீல
சப்தகங்களையும், பயின்று - சேர்ந்து, சென்றான் - அனுஷ்டித்து
அவற்றின் வழியிலே பிரவேசித்தான், எ-று. (82)
536. சித்தமெய் மொழிகண் மூன்றிற் சினவான் செழும்பொற் பாதம்
மத்தகத் தணிந்து நான்கு மங்கலம் பயின்று வையத்
துத்தமர் தம்மை யேத்திச் சரணம்புக் குயிரை யோம்பித்
தத்துவம் பயின்று தானந் தவத்தொடு தயாவிற் சென்றான்.
(இ-ள்.)(மேலும்) சித்தம் - மனதும், மெய் - சரீரமும், மொழிகள்
- வசனமுமாகிய, மூன்றில் - மனவாக்காய வந்தக்கரணங்களினால்,
சினவரன் - |