நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 249


 

ஜினேஸ்வரனுடைய,  செழும்  - செழுமை பொருந்திய, பொற்பாதம் -
அழகிய  திருவடிகளை,  மத்தகத்து   -  சிரசில், அணிந்து - தரித்து,
நான்கு   மங்கலம்    -  (அரஹந்தர்   மங்களம்,   ஸித்தர்மங்களம்,
ஸாதுமங்களம், தர்மங்களமென்னும்)நான்கு மங்களங்களை, பயின்று -
சேர்ந்து   (அதாவது :    பாவித்து),     வையத்து    - உலகத்தில்,
உத்தமர்தம்மை   -  உத்தமர்களாகிய பஞ்சபரமேஷ்டிகளை, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி, சரணம்புக்கு - அவர்கள் பதமே ரக்ஷணையாக
அப்பதத்தை  அடைந்து,   உயிரை  - ஸகலஜீவன்களையும், ஓம்பி -
உபசரித்து,தத்துவம் பயின்று - ஸ்வாத்மதத்துவத்தில் பழகி, (அதாவது :
ஹேயோபாதேயதத்துவவிசாரணை   செய்து),    தானம்   -    ஸத்
பாத்திரங்களில்    செய்யும்      தானங்களோடும்,   தவத்தோடு -
தபோபாவனையுடனும்,   தயாவில்   -  ஜீவதயவிலும், சென்றான் -
சேர்ந்தான், எ-று.                                     (83)

537. இறைவன தறத்தை யேந்தல் சேர்ந்தபி னிராம தத்தை
    கறைகெழு வேலி னானைக் கைவிடா திருந்து நோற்று
    நிறையழி காத லாலே நிதானத்து நின்று சென்றாள்
    கறையிலா வாயு நீங்கிக் கற்பமா சுக்கி லத்தே.

     (இ-ள்.)(இவ்வாறு) இறைவனது - ஸர்வஜ்ஞனால் சொல்லப்பட்ட,
அறத்தை . ஸ்ரீஜினதருமத்தை, ஏந்தல்  - பெருமையிற் சிறந்தவனாகிய
பூர்ணச்சந்திர  குமாரன்,  சேர்ந்தபின்  - சேர்ந்த பிறகு, இராமதத்தை
இராமதத்தாரியாங்கனை,    கறைகெழுவேலினானை  -  இரத்தக்கறை
பொருந்திய வேலாயுதத்தையுடைய அக்குமாரனை, கைவிடாது - விட்டு
நீங்காமல்,     இருந்து    - அவனோடு  கூடவேயிருந்து, நோற்று -
மஹாநோன்பு      முதலானவைகளை     நோற்று,     நிறையழி -
மனோநிறைநழுவும்,  காதலாலே  - ஆசையாலே, நிதானத்து நின்று -
பவாந்தரத்திலும்  இந்தப்   பூர்ணச்சந்திர  குமாரனையே புத்திரனாகப்
பெறுவேனாகவென்னும்  நிதானத்திலே செலுத்திய மனதினோடு நின்று,
கறையிலா    -   குற்றமில்லாத,    ஆயு   -    தனதாயுஷ்யமாகிய
மனுஷ்யாயுஷ்யம்,     நீங்கி   -    நீங்கி,     கற்பமாசுக்கிலத்து -
மஹாசுக்ரகல்பத்தில்,   சென்றாள் - (தேவாயுஷ்யமுதிப்ப) அடைந்தாள்,
எ-று.                                                  (84)

538. பாகரப் பிரபை யென்னும் விமானத்துப் பருதி போல
    பாகரப் பிரப னென்னுந் தேவனாய்ப் பாவை தோன்றி
    நாகர்வந் திறைஞ்ச வின்ப மூர்த்தியாய் நடுவி ருந்தாள்
    சாகரம் பத்தோ டாறு தனக்குவாழ் நாள தாமே.

     (இ-ள்.)   (அவ்வாறடைந்த   பின்)  பாகரப்பிரபையென்னும் -
பாஸ்கரப்பிரபையென்கிற,   விமானத்து   -   தேவ   விமானத்திலே,
பருதிபோல  - சூரியனைப்போல,  பாகரப்பிரபனென்னும் - பாஸ்கரப்
பிரபனென்கிற, தேவனாய் - தேவனாகி,