250மேருமந்தர புராணம்  


 

பாவை    -   சித்திரப்பாவை  போன்ற   விராமதத்தை,  தோன்றி -
அவதரித்து,  நாகர்   - ஸாமான்ய  தேவர்கள், வந்திறைஞ்ச - வந்து
வணங்க,   இன்பமூர்த்தியாய்  - ஸௌக்கியரூபத்தை யுடையவனாகி,
நடுவு   - ஸாமான்ய   தேவர்கள் தன்னைச்சூழ அவர்களினிடையில்,
இருந்தாள்   -   தங்கினாள், தனக்கு    -    அந்தப்    பாஸ்கரப்
பிரபதேவனாகப்பிறந்த    தனக்கு,   வாழ்நாள் - ஆயுஷ்யநாளானது,
சாகரம்    பத்தோடாறது   -  பதினாறு கடற்காலம், ஆம் - ஆகும்,
எ-று.                                                 (85)

539. ஈரெட்டா மாயி ரத்தாண் டிடைவிட்டின் னமுத முண்ணா
    வீரெட்டாம் பக்கந் தன்னை யிடையிடை விட்டு யிர்த்து
    மோரெட்டின் பாதி யாய நரகத்தி லவதி யொட்டா
    வோரெட்டுக் குணங்கள் வல்ல வுடம்பைந்து முழமு யர்ந்தான்.

     (இ-ள்.)  (அங்ஙனம்  தோன்றிய   அத்தேவன்)   ஈரெட்டாமா
யிரத்தாண்டு   - பதினாறாயிரம்   வருஷங்கள், இடைவிட்டு - நடுவிற்
செல்லவிட்டு,   (அதன் பிறகு),   இன்னமுதம்   -    இனிமையாகிய
தேவாமிர்தத்தை,  உண்ணா  - மனதினால் புஜித்தவனாகி, ஈரெட்டாம்
பக்கந்தன்னை - பதினாறு பட்சங்களை, இடையிடைவிட்டு - மத்தியில்
மத்தியில்   செல்லவிட்டு   (அதாவது : எட்டுமாதத்திற்கொருதடவை),
உயிர்த்து   - உச்வாஸ   நிச்வாஸங்களையுடையவனாகி,   ஓரெட்டின்
பாதியாய - ஒரு எட்டில் பாதியான, நரகத்தில் - நாலாநரக பரியந்தம்,
அவதியொட்டா  -  அவதிஜ்ஞானத்தாலறியும் தன்மை சேர்ந்தவனாகி,
(தான்பெற்ற)  ஒரெட்டுக்குணங்கள்  வல்லவுடம்பு - (அணிமா மஹிமா
கிரிமா   லகிமா  ப்ராப்தி    ப்ராகம்யம் ஈசித்வம் வசித்வம் என்னும்)
அஷ்டசித்திகளைப் பெறவல்லதாகிய சரீரத்தில்,ஐந்து முழ முயர்ந்தான்
- ஸ்வபாவத்தால் ஐந்துமுழ உன்னதத்தையடைந்தான், எ-று.      (86)

540. மின்னரிச் சிலம்பி னோசை மிளிருமே கலையி னோசை
    யின்னரம் பிசையி னோசை யெழுந்தகீ தத்தி னோசை
    மின்னுடங் கிடையி னார்தம் விளைந்துலா மொழியி னோசை
    தன்னுளங் கவர வின்சொல் வீசாரத் தோடு நாளால்.

     (இ-ள்.)  (இங்ஙனம்  பெற்று   அவன்) மின் - மின்னல்போல்,
நுடங்கும்   -   அசைகின்ற,   இடையினார் தம் - இடையையுடைய
ஸ்திரீமார்களின்,   மின்   - பிரகாசம் பொருந்திய, அரி - பருக்கைக்
கற்களையுடைய,   சிலம்பினோசை  - பாதச்சிலம்புகளினது சத்தமும்,
மிளிரும் - ஒளியைவீசும், மேகலையின் - மேகலாபரணத்தினது, ஓசை
- ஓசையும்,    இன்   - இனிமையாகிய,   நரம்பிசையின் - நரம்புக்
கருவிகளாகிய வீணை முதலிய வாத்தியங்களினாலாகிய கீதங்களினது,
ஓசை - சத்தமும்,    எழுந்த   - கண்டங்களினா   லெழுப்பிப்பாட
உண்டாகிய,   கீதத்தின் - வாய்ப்பாட்டாகிய சங்கீதங்களது, ஓசை -
சத்தமும், விளைந்து - வாயில் உண்டாகி,