543. தூயசந் திரன்கலை பெருக நாடொறுந்
தீயவன் காளகந் தேயு மாறுபோற்
சீயசந் திரன்றவம் பெருக நாடொறுங்
காயமுங் கசாயமுங் கரிச மானவே.
(இ-ள்.) தூய - பரிசுத்தமாகிய, சந்திரன் - சந்திரனுடைய, கலை
- ஷோடச கலைகளானவை, நாடொறும் - தினந்தோறும், பெருக -
ஒவ்வொன்றாய் விருத்தியாக, தீய - பொல்லாத, வன் -
வலிமைபொருந்திய, காளகம் - கறுப்புநிறமான நித்தியராகுவானது,
தேயுமாறுபோல் - தேய்வதுபோல, சீயசந்திரன் - ஸிம்மச்சந்திர
மஹாமுனிவருடைய, தவம் - தவமானது, பெருக - விருத்தியாக,
நாடொறும் - நாள்தோறும் (அதாவது : நாளுக்கு நாள்), காயமும் -
சரீரமும், கசாயமும் - குரோதாதி கஷாய பரிணாமங்களும், கரிசமான -
க்ரசமாயின, (அதாவது : தேய்ந்து ஹீனமாயின), எ-று. (90)
544. ஈற்றிலா ராதனை விதியி லேந்தறா
னாற்றலுக் கேற்றவா றன்ன பானமுஞ்
சாற்றிய வகையினாற் சுருக்கிச் சையமே
லேற்றினான் றன்னைநின் றிலங்குஞ் சிந்தையான்.
(இ-ள்.)(அவ்வாறானபின்) ஈற்றிலாராதனை விதியில் - (சதுர்வித
ஆராதனைகளில்) கடைசியில் சொல்லப்பட்ட தபாராதனையின்
விதிப்பிரகாரம், ஏந்தல் தான் - பெருமையிற் சிறந்தவனாகிய
இம்முனிவன், ஆற்றலுக்கேற்றவாறு - தன் சக்திக்குத்தக்க வண்ணம்,
அன்னபானமும் - அன்னபானங்களை, சாற்றியவகையினால் -
பரமாகமத்தில் சொல்லப்பட்ட விதம்போல், சுருக்கி - குறைத்து,
நின்றிலங்கும் - (தன்னுடைய ஆத்மபாவனையாகிய, ஞானாராதனை,
தர்சனாராதனை, சாரித்திராராதனை யென்னும் இக்குணங்களில்)
நிலைபெற்று விளங்கும்படியான, சிந்தையான் - சுந்தாத்மத்
தியானத்தை யுடையவனாய், தன்னை - தன்னை, சையமேல் -
ஸம்மியங்களில் மேலான நிலையில், ஏற்றினான் - ஏற்றுவித்தான்,
(அதாவது : அவன் உத்க்ருஷ்ட ஸம்யமத்தை யுடையவனாய்ப் பிராணி
ஸம்யமம விஷய ஸம்யமங்களில் நிறைந்தான்), எ-று. (91)
545. சித்தமெய் மொழிகளிற் செறிந்து யிர்க்கெலாம்
மித்திர னாயபின் தேவ னாதியி
லொத்தெழு மனத்தனா யுவகை யுள்ளுலாய்த்
தத்துவத் தவத்தினாற் றனுவை வாட்டினான்.
(இ-ள்.) (பின்பு) சித்தம் - மனத்தினாலும், மெய் - சரீரத்தாலும்,
மொழிகளில் - வசனங்களினாலும், செறிந்து - பொருந்தி,
உயிர்க்கெலாம் - த்ரஸஸ்தாவர |