நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 253


 

ஜீவன்கட்  கெல்லாம், மித்திரனாயபின் - ஸ்நேகனான பாவனைசெய்த
பிறகு,   வேதனாதியில் - ஸாதாஸாத தேவனீயோதய சுகதுக்கங்களில்,
ஒத்தெழு மனத்தனாய் - ஒருதன்மைத்தா யுண்டாகு மனமுடையவனாய்,
(அதாவது :   ஹர்ஷவிஷாதமின்றி  ஸமதாபரிணாமத்தனாகி), தத்துவத்
தவத்தினால்   - தத்துவ ஸ்வரூபந்தெரிந்து உபாதேய தத்துவத்தினால்,
உவகையுள்ளுலாய்   -   மிகுதியான   ஸந்தோஷபாவனை மனத்துள்
வியாபித்து,   (அதாவது :   நிஜஸ்வரூபருசிலக்ஷணமாகி),  தனுவை -
சரீரத்தை,    வாட்டினான்  -    சுஷ்கமாக்கினான்,     (அதாவது :
வாடச்செய்தான்), எ-று.                                   (92)

546. திருந்தினார் தேய்வுகண் டெழும நீசர்போ
    னரம்பெலா மெழுந்தன நல்ல மாந்தரி
    லரங்கின நயனமுள் ளருந்த வக்கொடி
    யிருந்தமை காட்டிநின் றிலங்கு நீரவே.

     (இ-ள்.)   (அவ்வாறாகவே)   திருந்தினார்   -   திருத்தமான
குணமுடைய   பெரியோர்களுடைய,   தேய்வு - மெலிவை, கண்டு -
பார்த்து,   எழும்    - தலையெடுப்புப் பெற்றெழுகின்ற, அ - அந்த,
நீசர்போல்   - கீழ்மக்களைப்போல்,  நரம்பெலாம் - (இம்முனிவனது
சரீரவாட்டத்தால்)    நரம்புகளெல்லாம்,  எழுந்தன - மேலெழும்பித்
தெரிந்தன,   நல்லமாந்தரின் - நல்ல மனிதர்களைப்போல், நயனம் -
(இம்முனிவரனது)    கண்கள்,  அரங்கின - உள்ளழுந்திப் போயின,
(இதனால்)   அருந்தவக்கொடி   -   அரிதாகிய தவக்கொடியானது,
உள்ளிருந்தமை   -  இனிப்பலனைத்தர உள்ளடங்கி யிருக்கப்பட்ட
நிலைமையை,   காட்டி    -   சரீரமே   காண்பித்து, இலங்கும் -
விளங்கும்படியான, நீர - குணத்தையுடையதாயிற்று, எ-று.     (93)

547. தவத்தழ லெழுந்துயி ராம்பொற் றாதுவைத்
    துவக்கறச் சுடச்சுடத் தோன்று நீரொளி
    நிவத்தலா னின்றொளி துளும்பு மூர்த்தியா
    னுவத்துலுங் காய்தலு மொருவி னானரோ.

     (இ-ள்.)  (அதன்மேல்)    தவத்தழல்  -  ஆத்மத்தியானமாகிற
அக்கினியானது,   எழுந்து   -  உண்டாகி, உயிராம் பொற்றாதுவை -
ஆத்மனாகிற    ஸ்வர்ணதாதுவை,  துவக்கற - களங்கமற (அதாவது :
விபாவமற),  சுடச்சுட  - தகித்துத் தகித்துப் புடம்போட, தோன்றும் -
(அதனால்)  உண்டாகிய,  நீர் - ஸ்வகுணமாகிற, ஒளி - ஜோதியானது,
நிவத்தலால்   -    பிரகாசித்தலால்,    நின்று   - தன்னிலே நின்று,
ஒளிதுளும்பும்   -  ஜோதிததும்பும், மூர்த்தியான் - உருவத்தையுடைய
(அதாவது :   சரீரமாத்திர  பரிக்கிரகமுடைய) இம்முனி, உவத்தலும் -
யாதொரு     விஷயத்தில்     ஸந்தோஷித்தலும்,      காய்தலும் -
கோபித்தலுமாகிய,  (ராக, த்வேஷங்களை), ஒருவினான் - நீங்கினான்,
எ-று.                                                 (94)