254மேருமந்தர புராணம்  


 

548. தனுவது தனுவதாய்த் தனுவ தாயது
    மனநிறை பொறைதவம் மகிழ்ச்சி யெய்துவ
    நினைவது வினையினை நின்று திர்த்தது
    முனிவனுந் தனதுமேற் கோளின் முற்றினான்.

     (இ-ள்.)   (பின்னர்)   தனுவது   -  இம்முனிவரன் சரீரமானது,
தனுவதாய் சிறியதாகி (அதாவது : வாடி மெல்லியதாகி), தனுவதாயது -
க்ரசமாகப்பட்ட   சரீரமாகியது,   (அப்படிச் சரீரமெலிந்தும்), மனம் -
மனமானது, நிறை - நிறைவு பெற்ற, பொறை - க்ஷமையினாலும், தவம்
- அப்பியந்தர     தபோபாவனையினாலும்,      மகிழ்ச்சியெய்துவ -
ஸந்தோஷ   பாவனையோடு கூடியதாயிற்று, அந்நினைவது - அந்தத்
தபோத்தியான ஸம்மியக் ஞானபாவனையானது, நின்று -  நிலைபெற்று,
வினையினை     -     மித்தியாத்துவாதி  கர்மங்களை, உதிர்த்தது -
நிர்ஜரைசெய்தது,     முனிவனும்   - (இப்படிப்பட்ட      ஸம்மியக்
ஞானபாவனையால்)    இந்த   ஸிம்மச்சந்திர  முனிவரனும், தனது -
தன்னுடைய,    மேற்கோளின்     -      மேலான கொள்கையாகிய
ஸ்வஸம்வேதன ஞானத்தைப் பெறும்படியான ஸம்மியக் சாரித்திரத்தில்,
முற்றினான்   -    பூர்த்திபெற்றான்,  (அதாவது : கஷாயோபசமனம்
செய்தான்) எ-று.                                        (95)

549. எரியினுண் மூழ்கிய தென்ன தன்னதாய்ப்
    பரிசையை வென்றவப் பரம மாமுனி
    யருகனை யிருதய கமலத் துள்ளிரீஇத்
    தெரிவருஞ் சித்தரைச் சென்னி சேர்த்தினான்.

     (இ-ள்.) (பின்னர்) எரியினுள் - அக்கினியினுள்ளே, மூழ்கியது -
முழுகியது,    என்னது    -    எத்தன்மையதோ,     அன்னதாய் -
அத்தன்மையதாக,                   பரிசையை               -
க்ஷுத்பிபாஸாதித்வாவிம்சதிபரீஷஹங்களை,  வென்ற - ஆத்மத்தியான
பாவனா     பலத்தால்    ஜயித்த,   அப்பரமமாமுனி - உத்கிருஷ்ட
தபஸையுடைய  மேலான அந்த ஸிம்மச்சந்திர மஹாமுனி, அருகனை -
வீதராக     சுத்தோப      யோகனாகிய      அருகத்பட்டாரகனை,
இருதயகமலத்துள்    - தனது   மனமாகிற  தாமரை மலரில், இரீஇ -
இருத்தி, (அதாவது : ஸ்தாபித்து),  தெரிவரும் - தெரிதற்கரிய, சித்தரை
- ஸித்தபரமேஷ்டியை,     சென்னி   -   ஸிரஸில்,  சேர்த்தினான் -
தரித்தான், எ-று.                                         (96)

550. சென்னியி லிடுங்கவ சத்தொ டத்திரம்
    பன்னரும் மூவரும் பாங்கி னாயபின்
    தன்னுடம் புயிரினைத் தடறு வாளென
    வுன்னிநின் றைம்பத முன்னி யோதினான்.

     (இ-ள்.)  (அவ்வாறு  சித்தரைச்  சேர்த்ததாகிய) சென்னியில் -
சிரசில்,   இடும்   -   இடப்பட்ட, கவசத்தொடு - மேற்சட்டையோடு,
(அதாவது : தலைக்காவல்)