264மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  உரகர்கோவே   -  தரணேந்திரனே!, என்று - என்று
அவ்விஷயங்களை விளக்கிக்காட்டி,  அவர் - அத்தேவர்கள், உரைத்த
- சொல்லிய,   மாற்றத்து  -   தர்ம   வசனத்தினாலே,   எரியுறும் -
அக்கினியை   யடைந்திளகிய,   மெழுகு   -  மெழுகானது, நீருள் -
ஜலத்தில்,   சென்றதுபோல்   -   அடைந்ததுபோல, திண்ணென்று -
இந்தப்பாஸ்கரப் பிரபதேவன் மனம் கெட்டியாகி, இறைவன் - அருகத்
பரமேஸ்வரனை,  நல்  -  நன்மையாகிய,  சிறப்போடு - பூஜையோடு,
ஒன்றி  -  பொருந்தி,  நின்ற  -  நிலைபெற்ற, நாள் - ஆயுஷ்யநாள்,
உலப்ப - நீங்க,  மின்னில் - மின்னற்கொடி - அத்திர்ச்யமாவதுபோல்,
நீங்கினான்   -   அவ்வுலகத்தை   விட்டு  நீங்கியவனாகி, அன்றைய
நிதானத்தாலே   -  பூர்வத்தில் பண்ணப்பட்ட நிதான சல்லியத்தாலே,
அரிவையாய்  -  ஸ்த்ரீயாகி,  நிலத்தைச் சேர்ந்தான் - பூமியில் வந்து
அவதரித்தான், எ-று.                                      (10)

 571. காவலன் போலத் தீப சாகரஞ் சூழ நின்ற
     நாவலந் தீவு தன்னுட் பரதத்து நடுவ ணோங்கிச்
     சேவலன் னத்திற் சேடி சிறகினை விரித்துத் தீவை
     மேவலுற் றெழுவ தொக்கும் விலங்கல்வே தண்ட முண்டே.

     (இ-ள்.)     தீபசாகரம்     -      அஸங்கியாதத்வீபங்களும்
சமுத்திரங்களும்,  சூழ  - தன்னைச் சூழும்படியாக, காவலன்போல -
இராஜாதிராஜனைப்போல,     நின்ற   -   நடுவில்   நின்ற, நாவலந்
தீவுதன்னுள்  -  ஜம்பூத்வீபத்திலே,  பரதத்துள் - பரதக்ஷேத்திரத்து -
நடுவண் - மத்தியில், ஓங்கி - உயர்ந்து, சேவலன்னத்தில்,  ஒரு ஆண்
ஹம்ஸத்தைப்  போல,  சேடி -  உத்தரபேஸ்ரீணதக்ஷிணபேஸ்ரீணிகளாகிற,
சிறகினை    -    சிறகுகளை,  விரித்து - விரித்துக்கொண்டு, தீவை -
இச்சம்பூத்வீபத்தை, மேவலுற்று - பொருந்தியதாகி,  எழுவது - மேலே
எழுந்து   போவதை,    ஒக்கும்   -    நிகர்க்கும்,   வேதண்டம் -
விஜயார்த்தமென்னும்    பெயரையுடைய,   விலங்கல்  -  வெள்ளியம்
பெருமலையானது, உண்டு - உளது, எ-று.                     (11)

 572. ஆழியைச் செறிந்து கண்ட மாறையு மடிப டுத்து
     வேழமா நிரைகள் விண்ணோர் வேந்தவிஞ் சையர்கள் சூழ
     வாழியங் கங்கை சிந்து வந்தடி யடைந்த குன்றம்
     பாழியந் தடக்கை வேந்தன் பரதன்போன் றிலங்கு நின்றே.

     (இ-ள்.)  ஆழியை -  மஹாலவண  சமுத்திரத்தை,  செறிந்து -
பூர்வாபா   பாகங்களில்   சேர்ந்து,   கண்டமாறையும்   -   இப்பரத
க்ஷேத்திரத்திலுள்ள     ஷட்கண்டங்களையும்,  அடிபடுத்து  -  தன்
கீழ்ப்படுத்தி, வேழமாநிரைகள்  - பெரிதாகிய யானைக் கூட்டங்களும்,
விண்ணோர் - தேவர்களும், வேந்தர் - அரசர்களும், விஞ்சையர்கள் -
வித்தியாதரர்களும், சூழ - தன்னைச்சூழ,  ஆழி - ஸமுத்திரமும், அம்
- அழகிய,