266மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  நின்ற  -  இவ்வண்ணமாகத்  தென்வட பாரிசங்களில்
பத்துப் பத்து யோஜனை யகலம் வித்தியாதர லோகமாய் மீந்து  நின்ற,
முப்பதும்   -   முப்பது   யோஜனை   அகலமும், பத்தேறி - பத்து
யோஜனையுயர்ந்து,   சென்றன  - சென்றனவாய், நெறியினால் - முன்
சொன்ன கிரமத்தினால்,  சேடியாகி - இரு பக்கங்களிலும் பத்துப்பத்து
யோஜனை  யகலமாகிய  உத்தரதட்சிண  பேஸ்ரீணிகளாகி, சக்கவாலர் -
சக்ரவாளரென்னும் பெயரையுடைய வியந்தரதேவர்களின், வியோகரம் -
மனோஹரங்களாகிய,     புரங்களாகும்    -   பட்டணங்கள்  அந்த
ஸ்ரீணிகளிலாகும்,   அன்றி    -   அவையல்லாமல், அக்குன்றில் -
அவ்விஜயார்த்த   பர்வதத்தில்,  பத்தும்   -  மீந்த பத்து யோஜனை
யகலமும்,   ஐந்துயர்   -   ஐந்து  யோஜனை  யுயர்ந்த, சூளியாம் -
சூளிகையாகும்,  மேல் - அந்தச்  சூளிகையின் மேல், ஒன்றி நின்று -
பொருந்தி  நின்று,  ஒளிரும் - பிரகாசியாநின்ற, கூடம் - சிகரமானது,
மகுடம்  போல - இராஜாக்களினுடைய சிரசில் சூட்டும் கீரிடம் போல,
ஒன்பதாம் - நவவிதங்களாகும், எ-று.                        (14)

575. இமையத்தி னிரும ருங்கும் நிலங்கள்போன் றிலங்கும் வெள்ளிச்
     சிமையத்தி னிரும ருங்கும் சென்றவிஞ் சையர்கள் சேடி
     சமையத்து நான்க தாவ தொக்குமேற் றிழிவு தன்னின்
     நமையொப்பர் விஞ்சை யாலிவ் விஞ்சையர் நாகர் கோவே.

     (இ-ள்.)  நாகர்கோவே   -   தரணேந்திரனே!, இமையத்தின் -
இமையோத்    கிரிபர்வதத்தினுடைய,    இருமருங்கும்   -   (உத்தர
தக்ஷிணமாகிய) இரண்டு பக்கங்களிலு மிராநின்ற, நிலங்கள் போன்று -
(பரதம் ஹைமவதமாகிய) நிலங்களைப் போல், வெள்ளிச் சிமையத்தின்
- வெள்ளி  மலையாகிய  விஜயார்த்த பர்வதத்தினுடைய, இருமருங்கும்
- இரண்டு    பக்கங்களிலும்,    சென்ற    -   விசாலமாகப் பரவிய,
விஞ்சையர்கள்    -    வித்தியாதரர்கள்   வசிக்கும்படியான, சேடி -
உத்தரதக்ஷிணபேஸ்ரீணிகளாகிய  அடி நிலையில் உள்ள நகரங்களாகும்,
(இங்கு)   ஏற்றிழிவு  தன்னில்   -   உத்ஸர்ப்பிணி   அவஸர்ப்பிணி
காலங்களில்,  (ஏற்பட்டகாலமானது)  சமையத்து  நான்கதாவதொக்கும்
- நாலாங்காலத்துக்குச்      சமானமாகவிருக்கும்,     விஞ்சையால் -
வித்தைகளினால்,  (பார்க்கும்பட்சத்தில்),  இவ்விஞ்சையர் - இங்குள்ள
வித்யாதரர்கள்,      நமையொப்பம்    -     நமக்கு   ஸமானமான
குணத்தையுடையவர்களாக இருப்பார்கள், எ-று.                (15)

 576. எழுமுழம் வில்லைஞ் ஞூற்றி லிழிவது மேற்று மில்லை
     வழுவிலா வருட நூறு புவ்வகோ டியினிற் கீழ்மேல்
     எழுமுழ மாயி ரத்தாண் டெண்பத்து நான்கு நிற்கும்
     முழுவில்லைஞ் ஞூறு கோடா கோடிமூ வாறு முன்னீர்.