(இ-ள்.)
(அவன் அவ்வாறு சொல்லி மேலும் கீழ்வருமாறு
கூறினான்:) மறுவிலா - களங்கமில்லாத, பளிங்கில் - ஸ்படிகத்தில்,
பாய்ந்த - வியாபித்த, மரகதக்கதிரை -
பச்சையிரத்தினத்தினது
கிரணத்தை, (அங்குள்ள) மான்கள் - மான்கூட்டங்கள், அறுகென -
அறுகம்புல்லென்று, கறித்து - நாவால் வளைத்துப் பல்லால் கடித்து,
கானல் - கானலை, நீரென - ஜலமென்று கருதி, செல்வபோலும்
-
செல்வனபோலப் பிரமிப்படையும், வெறி - வாசனையையுடைய, மலர்
- புஷ்பங்கள், துதைந்த - சேர்ந்திராநின்ற, நீலமணித்தலத்தகத்தை
-
இந்திர நீலரத்தினத்தாலாகிய பூமியை, கோல் - புள்ளிகளையுடைய,
வளையினார் - வளையல்களையணிந்திராநின்ற
ஸ்த்ரீமார்கள்,
குவளைவட்டமென்று - இதுகுவளை மலர்களையுடைய தடாகமென்று
கருதி, சென்று குறுகுவர் - போய் அடைவார்கள், எ-று. (18)
வேறு.
579. வேழ மும்மத மும்விளை தேறலும்
வாழை யின்கனி யுஞ்சுளை யும்மளாய்
வீழும் வெள்ளரு வித்திரள் வெற்பிதன்
சூழு மாழி முழங்குவ தொக்குமே.
(இ-ள்.) வெற்பு
இதன் - இவ்விஜயார்த்த பர்வதத்தினுடைய,
வீழும் - கீழிழியும், வெள் - வெளுப்பாகிய,
அருவித்திரள் -
அருவிஸமூஹங்கள், வேழம் - யானைகளினுடைய, மும்மதமும்
-
கர்ண கபோல பீஜ மதங்களாகிய மூன்றுவித மதஜலங்களோடும்,
விளை - அப்பர்வதத்தில் மற்றுமுண்டாகின்ற, தேறலும்
- மது
ஜலத்தோடும், வாழையின் கனியும் - வாழைப்பழத்தோடும், சுளையும்
- பலாச்சுளையுடனும், அளாய் -
கலந்து (அதாவது :
இவற்றையெல்லாம் வாரிக்கொண்டு பாய்ந்து), சூழும் -
பூமியைச்
சூழ்ந்திருக்கின்ற, ஆழி - சமுத்திரமானது, முழங்குவது - சப்திப்பதை,
ஒக்கும் - நிகர்க்கும், எ-று.
(19)
580. வருடை பாய வெழுந்த மணித்துகள்
கதிர்க ளாயெழில் வானைச் செறிந்தன
மரிஇய மாநிதி யாலிம் மலைமிசை
யிருது நீள்விழு தீன்றது போன்றவே.
(இ-ள்.) மாநிதியால்
- பெரிதாகிய நிதியோடு, மரீஇய -
சேர்ந்திரா நின்ற இம்மலைமிசை - இவ்விஜயார்த்த பர்வதத்தின் மேல்,
வருடை - எட்டடிமானானது (அதாவது : அஷ்டாபத மிருகமானது),
பாய - பாய்தலால் (அதாவது : பாய்ந்தோடுவதால்),
எழுந்த -
மேலெழும்பிய, மணித்துகள் - இரத்தினத் தூள்கள், கதிர்களாய்
கிரணங்களாய், எழில் - அழகு பொருந்திய, வானை - ஆகாசத்தை,
செறிந்தன - சேர்ந்தவைகள், இருது - தேவலோகத்திலுள்ள இருது
விமானமானது, நீள் - |