மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 269


 

நீண்டிரா நின்ற,  விழுது - விழுதுகளை,  ஈன்றது போன்ற - ஈன்றதை
நிகர்த்தனவாம், எ-று.                                     (20)

 581. மலைக்கண் வஞ்சியங் கொம்பன வின்சொலா
     ரலத்த கஞ்செறிந் தஞ்சிலம் பாரடி
     தலத்தெ ழுந்தசெந் தாமரைப் போதுபோ
     னிலத்த கம்பொருந் திக்கி டந்தவே.

     (இ-ள்.) மலைக்கண் - அவ்விஜயார்த்த  பர்வதத்தில், வஞ்சியங்
கொம்பன  -  வஞ்சிக்கொடியையும்    அழகிய    பூங்கொம்பையும்
போன்றவர்களாகிய,    இன்சொலார்   -   இனிய  சொல்லையுடைய
ஸ்த்ரீமார்களின்,   அலத்தகம்  செறிந்த - செம்பஞ்சுக்குழம்  பூட்டிய,
அம் - அழகிய,  சிலம்பு - பாதச்சிலம்பு, ஆர் - பொருந்திய, அடி -
பாதச்சுவடுகள்,   தலத்து - பூமியில்,  எழுந்த - உண்டாகிய, செம் -
சிவந்த,   தாமரைப்   போதுபோல்  - தாமரைப்   புஷ்பங்கள்போல,
நிலத்தகம் - பூமியில், பொருந்தி - சேர்ந்து, கிடந்து விளங்குவனவாம்,
எ-று.                                                  (21)

 582. பைம்பொ னன்பவ ழம்படி கம்மணி
     யொன்ப தினொளி யுங்கலந் துள்ளுலாய்
     வம்பு கொண்டு கிடந்தவை மால்வரை
     யும்பர் கோன்வில் லுறங்குவ தொக்குமே.

     (இ-ள்.)  மால் - பெருமையையுடைய,  வரை - அவ்விஜயார்த்த
பர்வதத்தில்,   பைம்   -   பசுமையான,   பொன் - ஸ்வர்ண, நன் -
நன்மையாகிய,   பவழம்  -  பவளங்கள்,   படிகம்  -  ஸ்படிகங்கள்,
(முதலாகிய),  ஒன்பதின் - நவரத்தினங்களினது, ஒளியும் - ஜோதியும்,
கலந்து - சேர்ந்து,  உள் - உள்ளே, உலாய் - பரந்து, வம்பு கொண்டு
- புதுமைக்கொண்டு,   கிடந்தவை   -   இருந்தவை, உம்பர்கோன் -
தேவேந்திரனது, வில் - தனுஸாகிய இந்திர தனுஸுவானது, உறங்குவது
- வந்துறங்கியதை, ஒக்கும் - நிகர்ப்பனவாகும், எ-று.           (22)

 583. எறிசு றாவுயர்த் தானிடம் போன்றெழில்
     வெறியு லாமலர்ப் பந்தரம் மெல்லணைச்
     செறியும் விஞ்சையர் சேயிழை யாரொடுங்
     குறைவி லாக்குரு வத்தவ ரொப்பரே.

     (இ-ள்.)  (இன்னும் அங்கு) எறி - ஜலத்தில் மோதுகின்ற, சுறா -
ஆண்   மகரமஸ்யத்தை,    உயர்த்தான்  -  துவஜத்தில்லாஞ்சனமாக
உடைய     (அதாவது :     மகரக்கொடியையுடைய)    மன்மதனது,
இடம்போன்று   -  ஸ்தானம்  போன்று,  எழில் - அழகிய,  வெறி -
வாசனையானது, உலாம் - பரந்து வீசும், மலர் - புஷ்