58. இடிமுர சியம்பு மெல்லை யிந்திர னகரந்
தன்னைப்
படிமிசை யணிந்து வைத்துப் படங்களைத் திட்ட வண்ணங்
கொடிநக ரணிந்து பூணு மாரமுங் குழையு மின்னக்
கடிமலர்க் களப மேந்திக் கணத்திடை யெழுந்த தன்றே.
(இ-ள்.)
இடி - இடியைப்போல சப்திக்கும்,
முரசு -
பேரிகையானது, இயம்புமெல்லை - அவ்வாறு முழங்குங் காலத்தில்,
இந்திரநகரந் தன்னை - தேவேந்திரனது பட்டணமாகிய அமராவதி
நகரத்தை, அணிந்து - அலங்கரித்து, படி மிசை -
இப்பூமிமேல்,
வைத்து - ஸ்தாபித்து, படம் - (மேலே மூடியிருந்த)
திரையை,
களைந்திட்ட வண்ணம் - நீக்கின விதம்போல்,
கொடி -
துவசங்களையுடைய, நகர் - அவ்வீத சோகபுரத்துள்ளார், பூணும் -
ஆபரணங்களும், ஆரமும் - முத்தாஹார ரத்தினாஹாரங்களும்,
குழையும் - குண்டலங்களும், மின்ன - பிரகாசிக்க,
அணிந்து -
அலங்கரித்துக்கொண்டு, கடி - வாசனை
பொருந்திய, மலர் -
புஷ்பங்களும், களபம் - சந்தனக்
குழம்புகளும், ஏந்தி -
எடுத்துக்கொண்டு, கணத்திடை - அச்சமயத்திலேயே, எழுந்தது
-
அங்குச் செல்ல வாரம்பித்தார்கள், எ-று.
நகர் - ஆகுபெயராய் அதிலுள்ள
மனிதரை யுணர்த்திற்று. நகர்
என்பது அஃறிணைப் பெயராதலின், எழுந்தது என்னும் அஃறிணை
முடிபை யேற்றது. (58)
59. கால்பொரு கடலிற் பொங்கிக் கடிநக ரடையு மெல்லை
மாலையுஞ் சாந்து மேந்தி மயிலனார் சூழப் போகிக்
காலனைக் கடிந்த வேந்தன் கடிநகர்க் குறுகிக் கைமா
மேலிழிந் திறைஞ்சிப் புக்கான் விண்ணவர்க் கிறைவ னொத்தான்.
(இ-ள்) கால்பொரு
- காற்றினால் மோதப்படுகின்ற, கடலில் -
சமுத்திரம்போல், பொங்கி - திரண்டு, கடி - காவலையுடைய, நகர் -
நகரிலுள்ளார், அடையும் - வந்து சேரும், எல்லை
- காலத்தில்,
மாலையும் சாந்தும் ஏந்தி -
(அரசன்) பூமாலை சந்தனம்
முதலானவைகளை யெடுத்துக்கொண்டு, மயிலனார் - மயில் போன்ற
சாயலையுடைய தேவிமார்கள், சூழ -
தன்னைச் சூழ்ந்துவர,
கைமாமேல் - யானையின் பேரில், போகி - சென்று,
காலனை -
இயமனை, கடிந்த - கோபித்து நீக்கிய, வேந்தன்
- ஸ்வயம்பு
நாமபகவானது, கடி - விளக்கமாகிய, நகர் - கோவிலை, குறுகி
-
அடைந்து, இழிந்து - யானையினின்று மிறங்கி, புக்கான் - புகுந்தான்,
(அங்ஙனம் புகுந்த மாத்திரத்தில் அவன்) விண்ணவர்க்
கிறைவன்
ஒத்தான் - தேவேந்திரனை நிகர்த்து யாவரிலுஞ் சிறந்தான், எ-று. (59)
60. வானவிற் கடந்து மான பீடத்தை வணங்கி வாழ்த்தி
மானதம் பத்தை எய்தி வலங்கொண்டு பணிந்து போகி |