பத்தாலாகிய, பந்தர் - பந்தல்களினுள், அம் - அழகிய,
மெல்லணை -
மிருதுவாகிய புஷ்பமெத்தைகளில், சேயிழையாரொடும் -
சிவந்த
ஒளிவீசும் இரத்தினாபாணங்களையணிந்த ஸ்த்ரீமார்களுடன், செறியும்
- சேர்ந்திராநின்ற, விஞ்சையர் - வித்தியாதரர்கள்,
குறைவிலா -
போகங்களில் குறைவில்லாத, குருவத்தவர் -
போக பூமியாகிய
உத்தரகுருக்ஷேத்திரத்திலிராநின்ற மனுஷ்யர்களை,
ஒப்பர் -
நிகர்ப்பார்கள், எ-று.
(23)
584. கின்ன ரமிது னஞ்செய்த கீதமாய்ந்
தின்ன ரம்பி னெழுந்த வெழால்வழி
மின்னி னாடு மரம்பையர் மேவலாற்
பொன்னு லகது போலுமோர் பாலெலாம்.
(இ-ள்.) ஓர் பாலெலாம்
- அம்மலையின் ஒரு பக்கமெல்லாம்,
கின்னர மிதுனம் - கின்னர மிதுனங்கள், செய்த - பாடுதல் செய்த,
கீதம் - சங்கீதத்தை, ஆய்ந்து - ஆராய்ந்து, நரம்பின் - வீணையின்
நரம்புகளில், எழுந்த - உண்டாகிய, எழால் வழி - நாதத்தின் வழியே,
மின்னின் - மின்னற் கொடிபோல, ஆடும்
- அசைந்து
நர்த்தனமாடுகின்ற, அரம்பையர் - நர்த்தனஸ்த்ரீகள்,
மேவலால் -
பொருந்தி நர்த்தனஞ் செய்கின்றபடியால், பொன்னுலகது போலும் -
தேவருலகத்தை நிகர்க்கும், எ-று. (24)
585. கோங்கு வாகை குடசங் குருந்துநல்
வேங்கை சண்பகந் தண்பகம் பாடலம்
வாங்கு வாழையுந் தாழையும் புன்னையும்
பாங்கி னோங்கின பார்மிசை யில்லையே.
(இ-ள்.) (இன்னும் அங்கே)
கோங்கு - கோங்கு மரமும், வாகை
- காட்டு வாகையும், குடசம் - மலைமல்லிகையும், குருந்து - காட்டு
நாரத்தை காட்டெலு மிச்சையும், நல் - நன்மையாகிய, வேங்கை
-
வேங்கைமரமும், சண்பகம் - சண்பக விருட்சமும்,
தண்பகம் -
தண்பகமென்னுமொரு ஜாதிமரமும், பாடலம் - பாதிரி விருட்சமும்,
வாங்கு - வளைந்த குலைகளையுடைய,
வாழையும் -
வாழைமரங்களும், தாழையும் - தாழை மரமும்,
புன்னையும் -
புன்னைமரங்களும், பாங்கின் - வரிசையாக, ஓங்கின - உயர்ந்திரா
நின்றனவாம், பார்மிசை - இப்பூமியின்மேல், இல்லை
- இதற்கு
உவமை இல்லை - எ-று.
(25)
586. கள்ளு மிழ்ந்தல ருங்கழு நீர்ச்சுனை
புள்ளொ லிப்பவண் டார்த்தெழும் பூம்பொய்கை
வெள்ள மார்ந்துழ வின்றி விளைவய
லுள்ள வண்ண முரைத்தற் கரியவே. |