(இ-ள்.)
(இன்னும் அவ்விடத்தில்) கள் - மதுவை, உமிழ்ந்து -
சொரிந்து, அலரும் - மலரும், கழுநீர் - கழுநீர்ப்புட்பங்களையுடைய,
சுனை - சுனைகளும், புள் - பட்சிகள், ஒலிப்ப - சப்திக்க, வண்டு -
வண்டுகளும், ஆர்த்தெழும் - சப்தித்தெழுகின்ற,
பூம்பொய்கை -
புஷ்ப தடாகங்களும், வெள்ள மார்ந்து - ஜலப்பெருக்கு நிறைந்து,
உழவின்றி - உழவுத் தொழிலில்லாமல், விளை - தாமாக விளைந்து
பலனைத்தருகிற, வயல் - வயல்களும், உள்ள வண்ணம் - தங்கள்
யதாஸ்வரூபங்களை, உரைத்தற்கு - அவ்விதமாகவே வர்ணிப்பதற்கு,
அரிய - அருமையானவையாம், எ-று. (26)
வேறு.
587. மற்றிந்த மலைமிசை வடதென் சேடியிற்
கொற்றவ ருறைபதி கோடி யூர்களாற்
சுற்றப்பட் டிருந்தவை நூற்றொ ருபதிற்
றெற்கொரு புரிநல தரணி திலகமே.
(இ-ள்.) மற்று - பின்னை,
இந்த மலைமிசை - இந்த விஜயார்த்த
பர்வதத்தின்மே லிராநின்ற, வடதென் சேடியில் - முதனிலையாகிய
உத்தரதக்ஷிண பேஸ்ரீணிகளில், கோடியூர்களால் - கோடிக்கணக்கான
அநேக கிராமங்களினால்,
சுற்றப்பட்டிருந்தவை -
சூழ்ந்திராநின்றனவாகிய, கொற்றவர் - வித்தியாதர ராஜாக்கள், உறை -
தங்கியிராநின்ற, பதி - இராஜதானியாகிய,
நூற்றொருபதில் -
நூற்றுப்பத்துப் பிரதான பட்டணங்களில், தெற்கு - தக்ஷிணபேஸ்ரீணியில்,
நல - நன்மையாகிய, தரணி திலகம்
- தரணீ திலகமென்னும்
பெயரையுடைய பட்டணமானது, ஒருபுரி - ஒரு நரகமாம், எ-று. (27)
588. கொடிமிடை கோபுர வீதி வாயெலாம்
வடிவுடை மகளிரும் மைந்த ரும்மலிந்
தடியிடு மிடம்பெறா தடையும் மாநகர்
கடலிடை நதிபுகுங் காட்சித் தாகுமே.
(இ-ள்.) கொடி
- துவஜக்கொடிகள், மிடை - நெருங்கிச்
சேர்ந்த, கோபுரம் - கோபுரங்களையுடைய, வீதிவாயெலாம் - மஹா
வீதிகளிலெவ்விடங்களிலும், வடிவுடை - நல்ல உருவத்தையுடைய,
மகளிரும் - ஸ்த்ரீமார்களும், மைந்தரும் - புருடர்களும், மலிந்து
-
நிறைந்து, அடி - பாதங்களை, இடும் - பெயர்த்து வைக்கும், இடம் -
இடத்தை, பெறாது - அடையாமல், அடையும்
- நெருங்கிச்
செல்கின்ற, மாநகர் -
பெரிதாகிய ஜனஸமூகமுடைய
அப்பட்டணமானது, (இவ்வித ஜன நெருக்கத்தின் ஆரவாரத்தால்),
கடலிடை - சமுத்திரத்தில், நதிபுகும் -
பல நதிகள் அடையும்,
காட்சித்தாகும் - தோற்றத்தையுடையதாகும், எ-று.
|