272மேருமந்தர புராணம்  


 

     ஜனங்கள்  நிறைந்த  பல  வீதிகள் அந்நகரத்தில்  விளங்குவது
ஜலம் நிறைந்த பல நதிகள் கடலிற் பாய்வது போன்றிருக்கும்.    (28)

 589. சுறவுயர் கொடியுடைத் தோன்றல் காளையர்
     நறைவிரி மரைமலர் நங்கை மங்கையர்
     பொறியுறு புலங்களும் போக பூமிய
     தறிவன தணிநகர் போலு மாநகர்.

     (இ-ள்.)  (இன்னும்)  மாநகர் - பெரிதாகிய அப்பட்டணத்துள்ள,
காளையர்  -  விட  புருஷர்கள்,  சுறவுயர்  கொடியுடை  -  உயர்ந்த
மகரக்கொடியை   யுடைத்தாகிய,   தோன்றல்  - பெருமையிற் சிறந்த
மன்மதனேயாவர்,      மங்கையர்     -     ஸ்த்ரீகள்,     நறை -
வாசனையையுடைய,   விரி  -  மலர்ந்த, மரைமலர் - தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற,   நங்கை - இலக்குமி  தேவியேயாவார்கள், பொறியுறு
- பஞ்சேந்திரியங்களிற்        பொருந்துகின்ற,       புலங்களும் -
விஷயங்களும்,    போகபூமி   -   போகபூமியிலுள்ளவைகளேயாகும்,
(இவையன்றியும்)   அது  -  அந்நகர்,  அறிவனது - அருக பரமனது,
அணி  -  அழகு  பொருந்திய,  நகர்போலும் - சமவஸரணமென்னும்
சபையை நிகர்க்கும், எ-று.

     போகபூமி, ஆகுபெயராய் அதிலுள்ள அனுபவங்களை யுணர்த்தி நின்றது.                                                (29)

வேறு.

 590. நரம்பி னின்னொலி நாடக மாடுநல்
     லரம்பை யரனை யாரொலி யாய்பிழி
     சுரும்பு ணும்மொலி சூதெறி 1கோதையர்
     கரும்பி னன்மொழி யுங்கவ்வை செய்யுமே.

     (இ-ள்.)   (இன்னும்   அங்கே) நரம்பின் - வீணைத்தந்தியினது,
இன்   -   இனிமையாகிய,  ஒலி   - சப்தமும், நல் - நன்மையாகிய,
நாடகமாடும்   -   நர்த்தனஞ்   செய்கின்ற,   அரம்பையரனையார் -
தேவரம்பையரை   நிகர்த்த   நர்த்தகிகளது,   ஒலி - சப்தமும், ஆய்
- வண்டுகளால்    ஆராய்ந்து    கொள்ளப்பட்ட,   பிழி - மதுவை,
உணும்   -   உண்கின்ற,    சுரும்பு  - வண்டுகளது, ஒலி - ரீங்கார
சப்தமும்,   சூதெறி  -  சொக்கட்டான் காய்களை யுருட்டி யாடுகின்ற,
1கோதையர்   -   மாலையை   யணிந்திரா   நின்ற  ஸ்த்ரீமார்களது,
கரும்பின்   -   கரும்பின்   ரஸம்போல,   நல்   -  நன்மையாகிய
(மதுரமுடைய),    மொழியும்   -   வசனமும் (ஆகிய இச்சப்தங்கள்),
கவ்வை      செய்யும்    -    மிகுந்த    ஆரவாரத்தைச்   செய்து
கொண்டிருப்பனவாம், எ-று.                                (30)

____________________________________________

1கோதையர்     என்பது   தோகையர்   என்றும்   சில  பிரதிகளில்
 காணப்படுகின்றது.