274மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  துனார்கள் - சத்துரு  ராஜாக்களுடைய,  தோள்வலி -
புஜபலத்தை,   விலக்கிய  -  நீக்கிய,  புயத்து  - புஜபலத்தையுடைய,
அதிவேகன்  -  அதிவேக ராஜனுடைய, தேவி - பட்டத்தரசியானவள்,
விலக்கிலா  -  நீங்காத,  விழு - பரிசுத்தமாகிய, நிதி - ஐஸ்வரியமும்,
வென்றி  -  வெற்றியும்,   ஆயு  -  உத்கிருஷ்டமாகிய ஆயுஷ்யமும்,
ஆம் - ஆகின்ற,  இலக்கணம் - லக்ஷணங்களும், (ஆகிய) யாவையும்
- முழுமையும், இருந்த - நிறைந்திருந்த, கொம்பனாள் - புஷ்பக்கொடி
போன்றவள்,   பெயர் - அவளுடைய  நாமமானது, சுலக்கணையாம் -
ஸுலக்ஷணையென்பதாகும், எ-று.                           (33)

 594. பருதியின் னொளியளாம் பாவை தானவள்
     வருசிலைத் திருநுதன் மாம டந்தைபாற்
     றிருவெனத் தோன்றினாள் சீத ரையதாம்
     மருவிய பொருள்வழி வந்த நாமமே.

     (இ-ள்.)  பரிதியின்  -  சூரியன்போல, ஒளியளாம் - ஜோதியை
வீசுகின்றவளாகிய, பாவைதானவள் - பூர்வம் ராமதத்தையாகிப் பின்னர்
பாஸ்கரப்    பிரப    தேவனான    அப்பெண்ணானவள்,    வரு -
கைக்குவளைக்க  இசைந்து வருகின்ற, சிலை - வில்லைப்போன்ற, திரு
- அழகிய,   நுதல்   -   நெற்றியையுடைய,   மாமடந்தை   பால் -
பெருமைபொருந்திய   அந்த   சுலக்ஷணை   யென்னும்  பெண்ணின்
கருப்பத்திலடைந்து,     திருவென   -   (நவமாத பரிபூர்ணமானபின்)
இலக்குமிபோல்,  தோன்றினாள் - பெண்ணாகப் பிறந்தாள், பொருள் -
அப்போது  மிகுதியான  ஐஸ்வரியமானது,  மருவிய - சேர்ந்த, வழி -
காரணமாக,   வந்த  -  அவளுக்கேற்பட்ட,   நாமம்  - பெயரானது,
சீதரையதாம் - ஸ்ரீ தரையென்பதாகும், எ-று.                  (34)

 595. கொற்றவ னாங்குல மலையிற் றோன்றிய
     கற்புடைச் சுலக்கணைக் கனகப் பாத்தியுட்
     கற்பகக் கொடியது வளர்ந்து காமரும்
     பொற்புடை முலையரும் பெழுந்து பூத்தவே.

     (இ-ள்.)  கொற்றவனாம்   -   அதிவேகனென்னும் ராஜாவாகிற,
குலமலையுள்  -  குல பர்வதத்தில், தோன்றிய - உண்டாகிய, கற்புடை
- பதிவிரதா   குணமுடைய,  சுலக்கணை   -   சுலக்ஷணையென்னும்
பெயரையுடைய       தேவியாகிற,      கனகப்       பாத்தியுள் -
ஸ்வர்ணப்பாத்தியுள்,     கற்பகக்கொடியது     -   ஸ்ரீதரையென்கிற
கல்பகவல்லிக்  கொடியானது,  வளர்ந்து - வளர்ச்சியுற்று,  காமரும் -
இச்சிக்கத்   தகுந்த,  பொற்புடை - அழகையுடைய,   முலையரும்பு -
ஸ்தனங்களாகிற   அரும்புகளானவை,  எழுந்து  - உண்டாகி, பூத்த -
அதனிடத்தே புஷ்பித்தன, எ-று.

     இதனால்   ஸ்ரீதரை  யென்பவள்  யௌவன மடைந்தாளென்பது
பெறப்படும்.                                             (35)