276மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  இறை - உயர்ச்சிபெற்ற அல்லது இரேகைகளையுடைய,
வளை - வளையல்களை   யணிந்த,  இராமை - இராமதத்தை, தன் -
தன்னுடைய, இளைய காளை - இளைய குமாரனாகிய பூர்ணச்சந்திரன்,
மேல் பிறவியில் - இதன்மேல்   வரும்  பிறவிகளில்,   என் வயின் -
எனது கருப்பத்தில்,  பிறக்குமாய்விடின்  - பிறப்பானேயானால், (அது),
நிறை -  நிறைவு   பெற்ற,   தவப்பயன்  -  என்னுடைய  தவத்தின்
பயனாகும்,  (ஆதலின்  நான்  தவஞ்செய்தவளாயிருப்பின் அவ்வாறே
அவன்  பிறப்பானாக),  எனா - என்று, நினைத்த - அவள் எண்ணிய,
சிந்தையின் - நிதான சல்லிய சிந்தையினால், மறுவிலா - குற்றமில்லாத,
திருவனாள்  -  இலக்குமி   போன்றவளாகிய    அச்சீதரையினுடைய,
வயிற்றுள்   -   கருப்பத்திலடைந்து,    தோன்றினான்  -  முன்னே
பூர்ணச்சந்திரனாகவிருந்த    வைடூரியப்    பிரபதேவன்  பெண்ணாய்
அவதரித்தான், எ-று.                                     (38)

 599. மங்கையாய் மைந்தனாய் வானிற் றேவனாய்
     மங்கையாய் வைடூரியப் பிரபன் றோன்றினான்
     இங்கிது மாற்றின தியல்பி சோதரை
     செங்கய னெடுங்கணத் திருவி னாமமே.

     (இ-ள்.)  மங்கையாய்  - முன்னே வாருணியென்கிற பிராம்மண
மங்கையாயிருந்து,   மைந்தனாய்   -   பிறகு  பூர்ணச்சந்திரனென்னு
மரசகுமாரனாகி,   வானில்  -  பிறகு  சுக்கிரகல்பத்தில், தேவனாய் -
தேவனாகி,   மங்கையாய்  -  இப்போது  ஸ்ரீ தரைக்குப் புதல்வியாகி,
வைடூரியப்  பிரபன்  -  வைடூரியப்   பிரபதேவன்,  தோன்றினான் -
பிறந்தான்,   மாற்றினது  - ஸம்சாரத்தினது, இயல்பு - ஸ்வரூபமானது,
இங்கு - இவ்விடத்தில்,   இது - இதுவாகும், செம் - சிவந்த, கயல் -
கெண்டை   மத்ஸ்யம்   போன்ற,   நெடும்   -   நீண்ட,   கண் -
கண்களையுடைய,   அத்திருவின்   நாமம்    -   இலக்குமிபோன்ற
அழகுடைய வப்புதல்வியின்  பெயரானது,   இசோதரை - யசோதரை
யென்பதாகும், எ-று.                                     (39)

 600. அங்கையு மடிகளு மலர்ந்த தாமரை
     கொங்கையுங் குழல்களுங் குரும்பை கொன்றையாம்
     வெங்கயற் பொருவகண் வேயை வென்றதோள்
     பங்கய மலர்மிசைப் பாவை பாவையே.

     (இ-ள்.)  பாவை - சித்திரப்பாவை  போன்ற  யசோதரையின்,
அங்கையும் - அகங்கையும்,  அடிகளும் - பாதங்களும், அலர்ந்த -
மலர்ந்த,   தாமரை   -   தாமரை   மலர்களாம்,   கொங்கையும் -
ஸ்தனங்களும்,    குழல்களும்,   கூந்தலின்   ஐந்து  பகுப்புக்களும்,
குரும்பை   கொன்றையாம்  -  கிரமமாகத்  தென்னங் குரும்பையும்
கொன்றைக்காயுமாம்,   (அதாவது : தனங்கள் குரும்பையும் ஐம்பால்
கொன்றைக்காயுமாம்),