கண் - நேத்திரங்கள், வெம் - வெவ்விய,
கயல் - கெண்டை மீனை,
பொருவ - ஒத்திருப்பவைகளாம், தோள் - தோள்கள்,
வேயை -
மூங்கிலை, வென்ற - ஜெயித்தனவாம், பாவை - அந்தப்பெண், பங்கய
மலர்மிசை - தாமரைப் புஷ்பத்தின் மேல் வசிக்கின்ற,
பாவை -
இலக்குமிதேவியேயாவள், எ-று.
பாவை - இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.
(40)
601. மேகர வத்தொடு மிடைந்த பேரொலிப்
பாகரப் புரத்தவ ரிறைவன் பாரொடு
நாகர்தம் மிடத்தையும் நடுக்கும் விஞ்சைகட்
காகரன் சூரியா வருத்த னாகுமே.
(இ-ள்.) (இது நிற்க)
மேகரவத்தொடு - மேக கர்ஜனையோடு,
மிடைந்த - சேர்ந்த, பேரொலி - பெரிதாகிய,
சப்தத்தையுடைய,
(அதாவது : மேககர் ஜனையை நிகர்த்த), பாகரப்புரத்தவர் - பாஸ்கரப்
புரத்திலுள்ளவர்களுக்கு, இறைவன் - இராஜாவாகியவன், பாரொடு -
இந்தப் பூமியோடு, நாகர் தம்மிடத்தையும்
- வித்தியாதர
லோகத்தையும், நடுக்கும் - பயத்தால் நடுங்கப் பண்ணும்படியான,
விஞ்சைகட்கு - வித்தைகளுக்கு, ஆகரன் - இருப்பிடமானவனாகிய,
சூரியா வருத்தன் ஆகும்
- சூர்யாவர்த்தனென்னும்
பெயரையுடையவனாவான், எ-று. (41)
602. நிறைமதி யனையமுக் குடையி னீழலி
னிறைவன திருந்தடி யிருந்த சிந்தையான்
பொறிகடம் புலங்கண்மேன் மிக்க போழ்தினும்
நெறியலா நெறிச்செலா னீதி யானவன்.
(இ-ள்.) நீதியானவன் -
நீதியை மிகவுமுடைத்தாகிய அச்சூரியா
வருத்தன், நிறை - நிறைந்த, மதியனைய - சந்திரனுக்குச் சமானமாகிய,
முக்குடையினீழலின் - சுவேத சத்திரத்தினது நிழலிலமைந்த, இறைவன
- அருக பரமனுடைய, திருந்தடி - செவ்வையாகிய பாதங்களில்,
இருந்த - சேர்ந்த, சிந்தையான் - மனமுடையவன்
(அதாவது :
அருகத்பக்தியே மிகுந்தவன்), பொறிகள் - பஞ்சேந்திரியங்கள், தம் -
தங்களுடைய, புலங்கண்மேல் - விஷயங்களின்மேல்,
மிக்க
போழ்தினும் - மிகுதியாகச் சென்ற காலத்திலும், நெறியலாநெறி
-
நன்மார்க்கமல்லாத கெட்ட மார்க்கத்தில் (அதாவது :
அநீதியாகிய
துர்விஷயங்களில்), செலான் - செல்லாத இயல்பையுடையவன்,
எ-று. (42)
603. ஆற்றன்மூன் றான்மலை யரசர் தம்வலி
மாற்றிய புயவலி மற்ற மங்கைதன் |