278மேருமந்தர புராணம்  


 

     னேற்றிய வடஞ்சுமந் தெழுந்த கொங்கையை
     யாற்றுளி வேள்வியா லண்ண லெய்தினான்.

     (இ-ள்.)   ஆற்றல்  மூன்றால்  -  (உத்ஸாக  சக்தி  பிரபுசக்தி
வித்தியா   சக்தியாகிய)   த்ரிசக்திகளால்,   மலை - அவ்விஜயார்த்த
பர்வதத்திலுள்ள,   அரசர்   தம்   -   பகையரசர்களுடைய,  வலி -
பராக்கிரமத்தை,   மாற்றிய  - கெடுத்த, புயவலி - புஜபலத்தையுடைய,
அண்ணல்   -   ஸ்ரீஷ்டனாகிய   இந்தச் சூரியாவர்த்த மஹாராஜன்,
மங்கை   தன் -  (அளகா புராதிபதியாகிய தர்சகனுக்கும் அவன்றேவி
ஸ்ரீ தரைக்கும் புத்ரியாகிய யசோதரை யென்னும்)  பெண்ணின், ஏற்றிய
- மேலே   சேர்க்கப்பட்ட,    வடம்   -  முத்துமாலையை, சுமந்து -
அணிந்து,  எழுந்த   -  மார்பினிடமாக உண்டாகிய, கொங்கையை -
ஸ்தனங்களிலுண்டாகிய போகத்தை, ஆற்றுள் - தர்மசாஸ்திர நெறியில்
பொருந்திய, வேள்வியால் -  ஒளபாஸன விதிக்கிரமத்தால், எய்தினான்
- விவாஹ பூர்வகமாக அடைந்தான், எ-று.

     ஆற்றுளி என்பதில் இ - சாரியை.                      (43)

 604. ஆரியா வருத்தத்துள் ளாரைப் போலவச்
     சூரியா வருத்தனுந் தோகை தன்னலம்
     வாரியா வருத்தத்துள் ளமிழ்தின் வாங்கிய
     தாரியான் பருகுநாட் சாச ரத்தினுள்.

     (இ-ள்-)  ஆரியாவருத்தத்து - ஆரியா வருத்தமென்கிற உத்தம
போக    பூமியில்,   உள்ளாரைப்போல   -   இராநின்ற  போகபூமி
மனுஷ்யர்களைப்போல,   தாரியான்  -  மாலையை யணிந்தவனாகிய,
அச்சூரியாவருத்தனும்   -   அந்தச்   சூர்யாவர்த்த   மஹாராஜனும்,
தோகைதன் -  யசோதரையினிடமாகிய,  நலம் - இன்பத்தை, வாரியா
வருத்தத்துள் - க்ஷீரசமுத்திரத்தின்  சுழற்சியிலுண்டாகிய, அமிழ்தின் -
அமிர்தத்தைப்போல,     வாங்கி     -    கிரகித்து,   பருகுநாள் -
அனுபவிக்கின்ற     காலத்தில்,     சாசரத்தினுள்   -    ஹைஸ்ரார
கல்பத்திலிராநின்ற, எ-று.                                  (44)

 605. காமருந் தேவியர் வதனத் தாமரைத்
     தேமரு வண்டெனச் செங்கட் சீதர
     னாமத யானைசா சாரத் தின்வழீ இப்
     பூமரு குழலிதன் புதல்வ னாயினான்.

     (இ-ள்.)    காமரும்    -    இச்சிக்கத்தகுந்த,     தேவியர் -
தேவிமார்களின், வதனம் - முகமாகிற, தாமரை - தாமரைப்புஷ்பத்தில்,
வண்டென - வண்டுபோல (சேர்ந்து), தேம்மரு - இனிமையையடைந்த,
செம் - சிவந்த,   கண் - கண்களையுடைய,  சீதரனாம் மத யானை -
பூர்வம்   மதயானையாயிருந்த   ஸ்ரீதரதேவன்,  சாசாரத்தின் - அந்த
ஸஹஸ்ரார கல்பத்தினின்றும், வழீஇ - ஆயுராவஸானத்தில்