மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 279


 

நழுவி,  பூமரு  - பொலிவு  பெற்ற,   குழலிதன் - அளகத்தையுடைய
யசோதரையின்,   புதல்வனாயினான்   -   புத்திரனாகி யவதரித்தான்,
எ-று.                                                  (45)

 606. சீதர னிசோதரைச் சிறுவ னாய்மண்ணிற்
     கேதமாந் திமிர்கெடக் கிரண வேகனாய்
     மாதிரந் தன்னையும் வணக்கும் விஞ்சையா
     லோதநீர் வட்டத்தி னொருவ னாயினான்.

     (இ-ள்.)   சீதரன்    -    (மேற்கூறிய)  ஸ்ரீதரதேவனானவான்,
(முன்னுரைத்தபடி),   யசோதரை - யசோதரையினுடைய, சிறுவனாய் -
குமாரனாகி,  மண்ணில் - இப்பூமியிலுண்டாகிய யாசக ஜனங்களுடைய,
கேதமாம் -  தரித்திர துன்பமாகிற, திமிர் - அந்த காரமானது, கெட -
நீங்க,       கிரணவேகனாய்        -       கிரணவேகனென்னும்
பெயரையுடையவனாய்,   மாதிரந்தன்னையும் - இப்பூமி   முழுமையும்,
வணக்கும் - வசப்படுத்தும்படியான,  விஞ்சையால் - வித்தைகளினால்,
ஓதநீர்    வட்டத்தில்    -    ஸமுத்திரஜலஞ்   சூழ்ந்த இப்பூமியில்,
ஒருவனாயினான் - ஒப்பற்றவனானான், எ-று.                  (46)

 607. குஞ்சிகள் கருவளைச் சுருளின் கொத்தன
     மஞ்சிலா மதியின தியற்கை வாண்முகங்
     குஞ்சரத் தடக்கைத்திண் புயங்கண் மார்பகம்
     பஞ்சின் மெல் லணைநல பதுமைக் கென்பவே.

     (இ-ள்.)   குஞ்சிகள்  -  அக்கிரணவேகனுடைய தலைமயிர்கள்,
கருவளைச்   சுருளின்  கொத்தன  -  கருத்த வளையல் சுருள்களின்
கொத்துகளுக்கொப்பாகும்,  வாள் - ஒளிபெற்ற,  முகம் - முகமானது,
மஞ்சிலா - களங்கமில்லாத,  மதியினது - சந்திரனுடைய,  இயற்கை -
ஸ்வரூபத்தை   உடையதாகும்,   திண் - கெட்டியாகிய,   புயங்கள் -
கைகள்,   குஞ்சரத்தடக்கை,   யானைத் துதிக்கையாகும், மார்பகம் -
மார்பானது,   நல்  -  நன்மையாகிய,   பதுமைக்கு - இலக்குமிதேவி
தங்கியிருப்பதற்கு,  பஞ்சின் - பஞ்சினாலாகிய,  மெல் - மிருதுவாகிய,
அணை - மெத்தையாம்,   என்ப - என்று  அறிந்தோர்  கூறுவார்கள்,
எ-று.                                                  (47)

 608. இடையரி யேற்றின திடையவ் வேந்தறன்
     துடைகணன் மாளிகைத் தூண்கள் போலுமே
     நடைவிடை யொதுக்கமா நளினங் காலடி
     யடையலர்க் கரியொடு கூற்ற மன்னனே.

    (இ-ள்.)  (இன்னும்)  அவ்வேந்தல்  தன் - பெருமையிற்  சிறந்த
அக்கிரண   வேகனுடைய,   இடை - இடையானது, அரியேற்றினது -
ஆண சிம்மத்தி