282மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)     (அவ்வாறு     கேட்டபோது     அம்முனிவரன்),
ஞானகாட்சியாவரணம்   -   ஞானாவரணீயம் தர்சனாவரணீயமென்னு
மிரண்டு கருமங்களும், அறிவொடு - ஞானத்தொடு, ஆலோகந்தன்னை
- தர்சனத்தையும்,    ஆர்    -   நிறைந்த,    இருள்போல - அந்த
காரத்தைப்போல,   நின்று  -  நிலைபெற்று, மறுதலை - மறைப்பதை,
செய்யும்  -  உண்டுபண்ணும்,  தீயநல்வேதனீயம் - அசாதவேதனீயம்
சாதவேதனீய     மென்னும்     இரண்டு    கர்மங்களும், வாளின் -
வாளாயுதத்தினுடைய,   எறியும் - சேதிக்கும்படியான, வாயிரண்டின் -
இரண்டு   விதமான  வாய்களில்,   ஒன்றில்  -  ஒன்றிலே,  நஞ்சு -
விஷத்தையும்,   ஒன்றில்   -   மற்றொரு    வாயிலே,  அமிர்தம் -
அமிர்தத்தையும்,    பூசி    -    தடவி,   நா - நாவிலே,  செறிய -
சேரும்படியாக,   வைத்தல் - வைத்ததை,  ஒக்கும் - நிகர்ப்பனவாம்,
எ-று.                                                 (53)

 614. மத்தத்தின் மயக்கு மோகம் வான்றளைப் போலு மாயச்
     சித்திரக் காரி நாமஞ் சிறுமையும் பெருமை யுஞ்செய்
     கொத்திரங் குலால னொக்கும் பொருளினைக் கொளாமற் காக்க
     வைத்தவன் போலு மந்த ராயங்கண் மன்ன வென்றான்.

     (இ-ள்.)  மன்ன - அரசனே!, மோகம் - மோகனீய கர்மமானது,
மத்தத்தின் - பைத்தியம்   பிடித்ததுபோல,   மயக்கும் - மயக்கத்தை
உண்டு பண்ணும், ஆயு - ஆயுஷ்ய கர்மமானது, வான் - பெரிதாகிய,
தளைப்போலும்    -     விலங்குக்குச்   சமானமாகும்,    நாமம் -
நாமகர்மமானது,    சித்திரக்காரி   -   (பல  உருவங்களை எழுதும்)
சித்திரக்காரியாகும்   (அதாவது :   பல   உருவங்களை   யெழுதும்
சித்திரக்காரிபோலப்   பல  உருவங்களைச்  செய்யும்), கொத்திரம் -
கோத்திர  கர்மமானது,   சிறுமையும்  -  சிறியனவும், பெருமையும் -
பெரியனவும்,   (ஆகிய   பாண்டங்களை),   செய்    -  செய்கின்ற,
குலாலனொக்கும்    -     குயவனுக்குச்   சமானமாக     உச்சநீசக்
கோத்திரங்களைப்  பண்ணும்,  அந்தராயம் - அந்தராய  கர்மமானது,
பொருளினை     -     திரவியத்தை,     கொளாமல்   -  எவரும்
கைக்கொள்ளாமல்,   காக்க  -  காவல்செய்ய,  வைத்தவன் போலும்
- வைக்கப்பட்ட காவற்காரனுக்குச்  சமானமாகும்,  என்றான் - என்று
அம்முனிவரன் சொன்னான், எ-று.

     கோத்திரம் - முதல் குறுகியது. கள் - அசை.            (54)

 615. முடிவிலாக் கொடுமைத் தாய மோகந்தான் முன்ன மில்லாக்
     கடியதீ வினைக ளெல்லாங் கட்டவே தானுங் கட்டுங்
     கெடுவழி தான்கெ டாமுன் கேடெந்த வினைக்கு மொட்டா
     தடுதலுக் கரிய மோக மரசனாம் வினைகட் கென்றான்.

     (இ-ள்.)   முடிவிலா   -   அளவில்லாத,   கொடுமைத்தாய -
பொல்லாங்குடையதாகிய,     மோகந்தான்  -  மோகனீயகர்மமானது,
முன்னமில்லா - அனாதியாகிய,